Fahadh Faasil : “தயாரிப்பாளர் இல்லைனா ராஜ் கமல் கதவ தட்டுவேன்.. அவ்வளவு சுதந்திரம்” - கமல் குறித்து ஃபகத்
நாளைக்கு எனக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் தான் ராஜ்கமல் நிறுவனத்திற்கு செல்வேன் என்று பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் பேசி இருக்கிறார்.
நாளைக்கு எனக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் தான் ராஜ்கமல் நிறுவனத்திற்கு செல்வேன் என்று பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் பேசி இருக்கிறார்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஃபகத் ஃபாசில், “ விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் நான் அவரிடம் உங்களின் பெரிய ஃபேன் என்று நான் கூறியிருப்பேன். அது உண்மையில் என் மனதில் இருந்து வந்தது. ‘விக்ரம்’ திரைப்படம் கமல் சாருக்கு ஒரு ட்ரிபியூட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டது. நான் கமல் சாரின் மிகப் பெரிய ஃபேன். அவரிடம் வேலை செய்ததின் மூலம், எனக்கு மிகச்சிறந்த நண்பர் கிடைத்திருக்கிறார். நான் அவரிடம் சினிமா, வாழ்கை என பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் இருக்கிறது. அவர் மிகவும் ஜாலியானவர்.
நானும் #கமல் சாரும் ஒரு நல்ல நண்பர்கள் அவர் கூட வேலை செஞ்சது மேஜிக் தான், நான் படம் நடிக்கும் போது தயாரிப்பாளர் கிடைக்கிலனா நானே ராஜ் கமல் அலுவலகத்திற்க்கு போய் அந்த படத்தை தயாரிப்பேன் ஏன்னா அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கொடுத்திருக்காரு - #பகத்பாசில்❤️#Vikram#KamalHaasan pic.twitter.com/glawQJ6Vgz
— SundaR KamaL (@Kamaladdict7) July 17, 2022
நான் படப்பிடிப்பிற்கு சென்ற முதல் நாளே கமல்சாருடன் இணைந்து நடிப்பதற்கான வசனங்களை கொடுத்தார் லோகேஷ். உடனே நான் என்னால் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே கமல்சார் என்னை அவரின் ஆபிஸூக்கு அழைத்து பேசினார். மிகவும் நீண்ட நேரம் நிறைய விஷயங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய தினம் நாங்கள் படப்பிடிப்பு நடத்த வில்லை. அவர் நம்மை மிகவும் ஸ்பெஷலாக உணரவைப்பார். நான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். நாளை எனக்கு ஏதும் தயாரிப்பாளர்கள் கிடைக்க வில்லை என்றால், ராஜ் கமல் நிறுவனத்திற்கு சென்று அந்தப்படத்தை தயாரிக்க சொல்லுவேன். அந்த அளவிற்கு அங்கு சுதந்திரம் இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்