மேலும் அறிய

Sivakarthikeyan: அப்பாவுக்கு ஒரு முத்தம் தர ஆசை.. பொண்ணுகிட்ட பூமரா இருக்க மாட்டேன்.. சிவா சொன்ன பேமிலி கதை!

"நான் அப்பா கூட உக்காந்து பேசுனதே இல்ல, நெறைய பேசணும்ன்னு ஆசையா இருக்கு. முடிஞ்சா ஒரு முத்தம் கொடுக்கணும், அவ்ளோதான்." என்று கூறினார்.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என 'டாக்டர்' படத்தின் ராசியான ஜோடி மீண்டும் சேர அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம்தான் 'டான்'. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பளார். திரும்பும் பக்கம் எல்லாம் டான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கல்லூரிக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தில் நடித்த பெரும் நடிகர் பட்டாளமே பல பேட்டிகள் கொடுத்து வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனும் பல யூட்யூப் சானல்களில் பேட்டி அளித்திருந்தார். அந்த வகையில் ஒரு வித்தியாச போட்டியாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளை விடியோவாக தொகுத்து சிவகார்திகேயனிடம் கொடுத்து பதில் சொல்லப்பட்டு ஒரு வீடியோ வைரலாகி இருந்தது. அதில் தன் மகளுக்கு வழங்கும் அட்வைஸ் குறித்தும், அப்பா குறித்தும் சில உணர்வுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Sivakarthikeyan: அப்பாவுக்கு ஒரு முத்தம் தர ஆசை.. பொண்ணுகிட்ட பூமரா இருக்க மாட்டேன்.. சிவா சொன்ன பேமிலி கதை!

அப்பா இப்போ இருந்தா அவருக்கு என்ன வாங்கி கொடுக்க ஆசை என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "அப்பாக்கு நல்லா ட்ரெஸ் பண்ணிக்க பிடிக்கும். ஆனா அந்த நேரத்துல அதுக்கான வசதிகள் இல்ல. கொஞ்சம் நல்ல பொசிஷனுக்கு போனதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் வசதி ஆனோம். துணி தச்சு தான் போடுவாங்க, அதனால இப்போ உலகத்துல உள்ள நல்ல துணி எல்லாம் வாங்கி ட்ரெஸ் பண்ண வைக்கணும்ன்னு ஆசை. அப்புறம் கார் மேல ரொம்ப கிரேஸ் அவங்களுக்கு. ஒரு அம்பாசிடர் வச்சிருப்பாங்க, அதுக்கு பார்ட்ஸ் மாத்துறது, ரிப்பர் பண்றது எல்லாம் அவங்களே பண்ணுவாங்க. இப்போ இருந்தா அவங்களுக்கு புடிச்ச கார் வாங்கி தர ஆசை. ஆனா அதையெல்லாம் தாண்டி நான் அப்பா கூட உக்காந்து பேசுனதே இல்ல, நெறைய பேசணும்ன்னு ஆசையா இருக்கு. முடிஞ்சா ஒரு முத்தம் கொடுக்கணும், அவ்ளோதான்." என்று கூறினார். 

Sivakarthikeyan: அப்பாவுக்கு ஒரு முத்தம் தர ஆசை.. பொண்ணுகிட்ட பூமரா இருக்க மாட்டேன்.. சிவா சொன்ன பேமிலி கதை!

உங்கள் மகளுக்கு நீங்கள் தரும் அட்வைஸ் என்ன என்று பெண் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "என் பொண்ணுக்கு நான் சொல்றது என்னன்னா நாம முன்ன எப்படி இருந்தோம், இப்ப எப்படி இருக்கோம் அப்டின்ற அந்த வித்யாசத்த புரிய வைப்பேன். ரொம்ப இல்ல, இப்போ ஒரு சைக்கிள் வாங்கினா, அது எனக்கு எந்த வயசுல கெடச்சுதுன்னு மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன். ரொம்ப நாள் கேட்டுட்டே இருப்போம் வாங்கியே தர மாட்டாங்க அப்டிலாம் சொல்ல மாட்டேன். ரொம்ப பூமர் அங்கிளா மாறாம, கொஞ்சமா அறிவுரை சொல்லுவேன்.", என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget