Akshara haasan : ஆணுறை வாங்குறதுல என்ன தப்பு.. அதுல என்ன பிரச்சனை.. நான் வாங்குவேன்.. அக்ஷராஹாசன் அதிரடி..
என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும் என்று அக்ஷராஹாசன் பேசியிருக்கிறார்.
![Akshara haasan : ஆணுறை வாங்குறதுல என்ன தப்பு.. அதுல என்ன பிரச்சனை.. நான் வாங்குவேன்.. அக்ஷராஹாசன் அதிரடி.. I can buy a condom Akshara haasan speaks about her achham madam naanam payirppu Akshara haasan : ஆணுறை வாங்குறதுல என்ன தப்பு.. அதுல என்ன பிரச்சனை.. நான் வாங்குவேன்.. அக்ஷராஹாசன் அதிரடி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/91625f8cfc658a9b07135d12c8f98e30_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அக்ஷராஹாசன், “இங்க செக்ஸ் அப்படின்னா பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது. நாங்களும் மனிதர்கள்தான். என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை . நீங்கள் பாதுகாப்பாக செக்ஸ் செய்கிறீர்கள். ஒழுங்காக செக்ஸ் நடக்கிறது. அதில் என்ன பிரச்னை.” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
அறிமுக இயக்குநரான ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அக்ஷரா ஹாசன், உஷா உதூப், அஞ்சனா ஜெயபிரகாஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படம். அமேசான் பிரைமில் மார்ச் 25-ஆம் தேதி வெளியான இந்தப்படம் பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
முன்னதாக ஹிந்தியில் ஷமிதாப் படத்தில் அறிமுகமான அக்ஷரா ஹாசன், தொடர்ந்து தமிழில் அஜித்தின் ‘விவேகம்’, விக்ரமின் கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடித்துள்ள ‘அக்னி சிறகுகள்’ அடுத்ததாக வெளியாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)