ரஜினியை நடக்கவிட்டே ஹிட் கொடுத்த நெல்சன்..லோகேஷ் சறுக்கியது எங்க ? கூலி vs ஜெயிலர் கம்பேரிசன்
Jailer vs Coolie : ஜெயிலர் படத்தில் நெல்சன் சாமர்த்தியமாக கையாண்ட எந்த விஷயங்களை கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்ய தவறினார்?

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கூட்டணி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது கூலி. கமலை வைத்து விக்ரம் , விஜயை வைத்து லியோ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்த தவறிவிட்டார். படத்தில் நாகர்ஜூனா , செளபின் , உபேந்திரா என பல மொழிகளில் இருந்து நடிகர்கள் இருந்தும் ரசிகர்களிடம் கூலி படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ரஜினியின் நடிப்பு பாராட்ட்டைப் பெற்றாலும் பலவீனமான திரைக்கதையும் கதையுடன் ஒட்டாத ஆக்ஷன் காட்சிகளும் விமர்சனத்திற்கு ஆளாகின. கூலி படத்தைப் பார்த்த பின்பு பலர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். ஜெயிலர் படத்தில் நெல்சன் கையாண்ட எந்த விஷயங்களை லோகேஷ் கனகராஜ் கவனிக்க தவறினார் என்பதை பார்க்கலாம்
ஆக்ஷன் காட்சிகள்
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் மற்ற படங்களைப் போல் இந்த படத்தில் ரஜினி நேரடியாக ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்கவில்லை. வயதை கருத்தில் கொண்டு ரஜினியை வைத்து பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளை அவர் உருவாக்கவில்லை மாறாக ரஜினியை ஒரு வெயிட்டான கேரக்டராக காட்டிவிட்டு ஆக்ஷன் காட்சிகளில் மற்றவர்களையே பயன்படுத்தினார். ஆனால் கூலி படத்தில் ரஜினி காட்சிக்கு காட்சி ஆக்ஷன் செய்கிறார். இந்த காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருந்தாலும் கதையுடன் ஒட்டாமலே இருந்த. ரஜினியின் நடிப்பை ரசித்த ரசிகர்கள் இந்த ஆக்ஷன் காட்சிகளை பெரியளவில் ரசிக்கவில்லை. கூலி படத்திற்கு முன்பு வெளியான ரஜினியின் வேட்டையன் படத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் இதே குறைபாடுதான் உள்ளது
காமெடி
ஆக்ஷன் , ரொமான்ஸ் , செண்டிமெண்ட் , காமெடி என எல்லா விதமான எமோஷனையும் சிறப்பாக செய்யக் கூடியவர் ரஜினி. ரொமான்ஸ் , ஆக்ஷன் என்பது இனிமேல் ரஜினி படங்களில் நேரடியாக தவிர்க்கப்படவே வாய்ப்புகள் அதிகம் . இதனால் ஜெயிலர் படத்தில் ரஜினியை வைத்து தனது தனித்துவமான டார்க் காமெடியை வர்க் அவுட் செய்து பார்த்தார் நெல்சன். படத்தில் அப்பா மகன் செண்டிமெண்ட் காட்சிகளை தவிர்த்து விறுவிறுப்பான காட்சிகளில் கூட காமெடி இருப்பதைப் பார்க்கலாம். கூலி படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை கையில் எடுத்த லோகேஷ் தனது வேகமான கதைசொல்லலில் இந்த எமோஷனை சரியாக கையாள தவறிவிட்டார்.
கேமியோ
கூலி மற்றும் ஜெயிலர் இரு படத்திலும் பிற மொழி சூப்பர்ஸ்டார்கள் கேமியோ செய்திருக்கிறார்கள். பிறகு ஏன் ஜெயிலர் படத்தில் மோகன்லால் மற்றும் ஷிவராஜ்குமார் கேமியோவை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் உபேந்திரா , நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. ?
ஜெயிலர் படத்தில் மோகன்லால் , ஷிவராஜ்குமார் ஆகிய இருவருக்கும் படத்தின் கதையோடு நேரடியாக தொடர்பில்லாதவர்கள். ரஜினிக்கு தேவையான உதவிகளை அவர்கள் செய்து தருகிறார்கள். மற்றபடி இந்த கதை முழுக்க முழுக்க ரஜினியை சுற்றியே நடக்கிறது. கேமியோ என்று தெரிந்தாலும் அளவோடு நடிகர்களை பயன்படுத்தியது ஜெயிலர் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்தது. ஆனால் கூலி படத்தில் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஆனால் இவரது கதாபாத்திரம் மிக தட்டையாக எழுதப்பட்டு பில்டப் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ஒரு அறையில் அடைந்து கிடக்கிறார் உபேந்திரா. க்ளைமேக்ஸில் மட்டும் வந்து சண்டை போடுகிறார். இது கிட்டதட்ட ஜெயிலர் படத்தில் நெல்சன் பயண்படுத்திய டெக்னிக் தான் என்றாலும் கதையில் இருந்த பல ஓட்டைகளை பார்த்து கடுப்பாகி க்ளைமேக்ஸ் வரும் ரசிகர்களுக்கு இது மேலும் கோபத்தையே கிளப்பியது என்று சொல்லலாம்.





















