மேலும் அறிய

House Of The Dragon: டிராகன்கள் பறக்கும் 2 அதிரடி ட்ரெய்லர்கள்! உற்சாகத்தில் ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடர் ரசிகர்கள்!

House Of The Dragon Trailer: இரு தரப்பு ரசிகர்களுக்குமாக டீம் பிளாக், டீம் க்ரீன் என 2 ட்ரெய்லர்களைப் பகிர்ந்து ஹவுஸ் ஆஃப் தி டிராகன் டீம் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ட்ரீட் கொடுத்துள்ளது.

சீரிஸ் உலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள ஹவுஸ் ஆஃப் த டிராகன் (House Of the Dragon) தொடரின் 2 ட்ரெய்லர்கள் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் முந்தைய பாகம்

பிரபல HBO தொலைக்காட்சித் தொடராக கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்ற தொடர் என்றால் அது ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’.

House Of The Dragon: டிராகன்கள் பறக்கும் 2 அதிரடி ட்ரெய்லர்கள்! உற்சாகத்தில் ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடர் ரசிகர்கள்!

அரியணைக்காக 7 கிங்டம்ஸ் எனும் நிலப்பரப்பின் இனக்குழுக்களுக்கிடையே  நிகழும் போர், சூழ்ச்சி, போராட்டம், வஞ்சகம், கொலை என பலவித உணர்ச்சிகள் கலந்து பரபரப்பினை எகிறவைத்த இந்தத் தொடர் டிராகன்கள், மற்றும் மேஜிக் எனக் கலந்து தனி உலகத்துக்கு ரசிகர்களைக் கொண்டு சென்று ஹிட் அடித்தது.

உலகம் முழுவதும் பெருமளவு ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படும் இத்தொடரின் முந்தைய பாகம் அதாவது ப்ரீக்வலாக ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடர் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது.

2 அதிரடி ட்ரெய்லர்கள்!

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் 9 அரச குடும்பங்களில் ஒன்றான ட்ராகன்களைக் கொண்டிருக்கும் ‘டார்கேரியன்’ எனும் இனத்தினை மையப்படுத்தி அமைந்துள்ள இத்தொடர், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் போலவே நட்பு, காதல், பாசம் இவற்றுக்கு இடையே அரியணைக்காக ஒரே குடும்பத்துக்குள் நடைபெறும் போராட்டம், போர் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்து, அதே வைபினைக் கடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

விசேரிஸ், அவரது மகள் ரெனைரா, விசேரிஸின் மனைவி அலிசென்ட், டேமன் டார்கேரியன் எனும் மையக் கதாபாத்திரங்களை சுற்றி அமைந்திருந்த கதை, இறுதியாக விசேரிஸ் இறப்பை அடுத்து அவரது மூத்த மகள் ரெனைரா, விசேரிஸின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் என இருதரப்பு கதாபாத்திரங்களுக்கிடையேயான போர் பதற்றத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் வகையில், 2 ட்ரெய்லர்களை தற்போது ஹெ.பி.ஓ மேக்ஸ் வெளியிட்டுள்ளது. இரு தரப்பு ரசிகர்களுக்குமாக டீம் பிளாக், டீம் க்ரீன் என 2 ட்ரெய்லர்களைப் பகிர்ந்து ஹவுஸ் ஆஃப் தி டிராகன் டீம் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ட்ரீட் கொடுத்துள்ளது.

மேலும் சென்ற சீசனைவிட இந்த சீசனில் டிராகன்கள் இன்னும் தத்ரூபமாக கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரும் ஜூன் 16ஆம் தேதி இத்தொடர் வெளியாக உள்ள நிலையில், இத்தொடர் இந்தியாவில் ஜியோ சினிமாஸ் தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: IPL 2024: 'எல்லாம் ஒரு ப்ரோமோஷன் தான்..' தேசியக்கொடி ஏந்தி ஐபிஎல் தொடக்க விழாவில் ஷோ காட்டிய அக்‌ஷய் குமார்!

Padai Thalaivan: சொன்னபடியே விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் ராகவா லாரன்ஸ்: படை தலைவன் அப்டேட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget