Tom Cruise | அயர்ன் மேன் ஆகிறாரா டாம் க்ரூஸ்? தாம்தூம் என குதிக்கும் ரசிகர்கள்.!!
அயர்ன் மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் டாம் க்ரூஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான பெயர் அயர்ன் மேன். 2008ஆம் ஆட்னு மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்திற்காக ஜான் பெவ்ரோ இயக்கிய இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் அயர்ன் மேனாக நடித்திருந்தார்.
இப்படத்தில், ஜெப் பிரிட்ஜஸ், ஷான் டௌப், டெரன்ஸ் ஹோவர்ட் மற்றும் கிவ்வினெத் பேல்ட்ரோ போன்ற பலர் நடித்திருந்தனர்.
முன்னதாக அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு டாம் க்ரூஸிடம் மார்வெல் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு சில காரணங்களை சொல்லி அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு க்ரூஸ் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே அயர்ன் மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதில் டாம் க்ரூஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களிலும் பரவியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் டாம் க்ரூஸ் அயர்ன் மேன் கெட்டப்பில் இருப்பது போல் இருக்கிறது. இதனால் டாமின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
(Rumor) Possibly the first image of Tom Cruise on set #DoctorStrange2 in (Motion Capture) for his Iron Man pic.twitter.com/nlvjj7sBAm
— Moth Culture (@Moth_Culture) January 18, 2022
டாம் குரூஸுக்கு தற்போது 59 வயது ஆகிறது. 1962ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 19ஆவது வயதில் ப்ரூக்ஷீல்டு படத்தில் அறிமுகமானார். பிரபலமானார். தனது படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடித்தது ரசிகர்களிடம் அவரை எளிதாக கொண்டு சேர்த்தது.
மிஷன் இம்பாசிபிளின் 6 பாகங்கள் இதுவரை வெளிவந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அதன் ஏழாவது பாகம் வெளியாக இருக்கிறது. முன்னதாக, சாதாரணமாக இருக்கும்போது டாக்டர் ப்ரௌனியாகவும் பின்னர் அயர்ன் மேனாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ராபர்ட் டவுனி ஜூனியர் ஹாலிவுட்டில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Issue: முடிவுக்கு வந்தது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்