Heart Beat Series: இது ஹார்ட் பீட் பாட்டு! டாக்டர்களைப் பற்றிய “ஹார்ட் பீட்” சீரிஸின் பாடல் வெளியீடு!
‘ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும்.
![Heart Beat Series: இது ஹார்ட் பீட் பாட்டு! டாக்டர்களைப் பற்றிய “ஹார்ட் பீட்” சீரிஸின் பாடல் வெளியீடு! Heart beat series disney hotstar release heart beat song details Heart Beat Series: இது ஹார்ட் பீட் பாட்டு! டாக்டர்களைப் பற்றிய “ஹார்ட் பீட்” சீரிஸின் பாடல் வெளியீடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/430e84a2c6c6860cf2c887702a0871ad1706771909259574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளம் பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அடுத்ததாக வெளியிடவுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸிலிருந்து “ஹார்ட் பீட் பாட்டு” எனும் பெப்பியான பாடலை வெளியிட்டுள்ளது. சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும், அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும். மருத்துவர்கள், மருத்துவமனை சூழல், மருத்துவர்கள் வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி அனைத்து வித உணர்ச்சிகளும் கலந்த ஜாலியான சீரிஸாக இந்த சீரிஸ் அமைந்திருக்கும்.
நடிகை அனு மோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸூக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜூன் எடிட்டிங் பணிகளை செய்கிறார். இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Amy Jackson: லண்டனில் இருந்து வந்த துரையரம்மா: கோலிவுட்டில் 14 ஆண்டு பயணம்: எமி ஜாக்ஸன் பிறந்தநாள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)