மேலும் அறிய

சூரியிடம் நில மோசடி செய்தது உண்மையா? விஷ்ணு விஷாலிடம் தீவிர விசாரணை!

தன் புகார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், உயர் நீதிமன்றம் அடையாறு காவல் நிலையத்தில் இருந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சினிமாவில் 1997ஆம் ஆண்டு முதல் நடித்து, வெண்ணிலா கபடிக் குழு படத்தில் கவனம் ஈர்த்து, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' என பல ஹிட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளவர் சூரி.

நடிகர் சூரி முன்னதாக நிலம் வாங்க நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டிஜிபி ரமேஷ் குடலாலா மூலம் 2.90 கோடி ரூபாயை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் வாங்கிக் கொடுத்த நிலம் சரியில்லாததால், அந்த நிலம் வேண்டாம் என சூரி கூறியுள்ளார்.

சூரியிடம் பண மோசடி?

அதனைத் தொடர்ந்து அவர்களும் வேறு இடத்தில் நிலம் வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் சொன்னபடி வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கொடுத்த பணத்தை சூரி கேட்ட போது, 1.30 கோடிக்கு மேல் பணத்தை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள 1.40 கோடியை தராமல் இருவரும் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னதாக டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் இருவர் மீதும் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தாமல் காவல்  துறையினர் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கு

இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் அடையாறு காவல் நிலையத்தில் இருந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டு, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் நடிகர் சூரி அளித்த மோசடி புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

விஷ்ணு விஷாலிடம் விசாரணை

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ரமேஷ் குடவாலா கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தப்பட் டது.

அதேபோல அவரது மகன் நடிகர் விஷ்ணு விஷாலிடமும், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜூடமும் விசாரணை நடத்தினர். முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்பட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மீண்டும் புகார் அளித்த நடிகர் சூரியிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget