ரசிகர்களுக்கு மகிழ்ச்சி...வெப் சீரிஸாக உருவாகும் ஹாரி பாட்டர்..முழு விபரம் இதோ
Harry Potter Series. : 90களில் இளைஞர்கள் இடையே மிக பிரபலமாக இருந்த ஹாரி பாட்டர் கதை வெப் சீரிஸாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஹாரி பாட்டர்
90 களில் பிறந்தவர்களின் இளமைக்காலம் ஹாரி பாட்டர் இல்லாமல் இருந்திருக்காது. ஜே.கே ரோலிங் எழுதிய 7 பாக நாவலை மையப்படுத்தி உருவான படம் ஹாரி பாட்டர். புத்தகத்தை காட்டிலும் ஹாரி பாட்டர் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. Harry Potter and the Philosophers Stone , Harry Potter and the Chamber of Secrets , Harry Potter and the prisoners of Azkaban , Harry Potter and the goblet of fire, Harry Potter and the order of phoenix , Harry potter and the half Blood Prince , Harry Potter and the Deathly Hollows என மொத்தம் எட்டு பாகங்களாக இப்படம் வெளியானது. ஃபேண்டஸி , மேஜிக் என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கதையுலகம் ஈர்த்தது.
டேனியல் ரேட்க்ளிஃப் , ரூபர்ட் க்ரிண்ட் , எம்மா வாட்சன் என இப்படத்தில் நடித்த நடிகர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவானார்கள். அந்த வகையில் தற்போது ஹாரி பாட்டர் கதை வெப் சீரிஸாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
வெப் சீரிஸாக உருவாகும் ஹாரி பாட்டர்
கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான பிரம்மாண்ட வெப் சீரிஸ்களை தயாரித்த HBO நிறுவனம் ஹாரி பாட்டர் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்தது. படத்தில் நடித்த அதே நடிகர்கள் வெப் சீரிஸில் நடிப்பார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் புதுமுக நடிகர்களை இந்த தொடரில் நடிக்க வைக்க இருப்பதாக படக்குழு சார்பாக தெரிவித்துள்ளார்கள். தற்போது வரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் பட்டியலை எச்.பி.ஓ வெளியிட்டுள்ளது.
HBO has just confirmed the first 6 cast members for the ‘HARRY POTTER’ TV series:
— DiscussingFilm (@DiscussingFilm) April 14, 2025
• Nick Frost as Hagrid
• John Lithgow as Dumbledore
• Paul Whitehouse as Argus Filch
• Luke Thallon as Quirinus Quirrell
• Paapa Essiedu as Severus Snape
• Janet McTeer as Minerva McGonagall pic.twitter.com/RlsQ78N5bh

