Harish Kalyan: கொழு கொழு பேபி யாரு தெரியுமா? அம்மாவுடன் இருக்கும் த்ரோபேக் போட்டோ பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்
அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் இருக்கும் த்ரோ பேக் புகைப்படத்தை ஹரிஷ்கல்யாண் பகிர்ந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அன்னையர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் அவர்களின் அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது அன்னையுடன் இருக்கும் குழந்தை பருவத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் ஏராளமான லைக்ஸ்களை குவித்தது.
பிக் பாஸ் செய்த மேஜிக் :
அமலாபால் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் சீசன் 1ல் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து பைனல்ஸ் வரை நிலைத்து இருந்தார். அதற்கு பிறகு மிகவும் பிரபலமான ஹரிஷ் அடுத்தடுத்து பியார் பிரேமா காதல், தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே என பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகைகளின் ட்ரீம் பாயாக வலம் வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் திருமணம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. ஹரிஷ் திருமணம் காதல் திருமணம் என எழுந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் :
ஹரிஷ் கல்யாண் பொருத்தவரையில் பிக் பாஸுக்கு முன் பிக் பாஸுக்கு பின் என பிரித்து சொல்லு அளவுக்கு அவரின் திரைவாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள். தற்போது ஹரிஷ் கல்யாண், நட்சத்திர கிரிக்கெட் பிளேயர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் முதல் திரைப்படமான 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'லவ் டுடே' மூலம் பிரபலமான இவானா நடிக்கிறார். மேலும் நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் மட்டுமின்றி டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.
ஹரிஷ் கல்யாண் தனது அம்மாவுடன் இருக்கும் த்ரோ பேக் புகைப்படத்தை பகிர்ந்து 'என் உலகம் நீ தான்! எல்லா அம்மாக்களும் தெய்வங்கள் தானே!' என கேப்ஷன் கொடுத்து இந்த உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.