Happy Republic Day 2022: அர்ஜூனின் தாயின் மணிக்கொடி முதல் ஷாருக்கானின் சக்தே இந்தியா வரை.. தேசபக்தி பாடல்கள்..
தாயின் மணிக்கொடி முதல் ஷாருக்கானின் சக்தே இந்தியா வரை - நரம்பை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல்களை பாடல்களை பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் நாளை 73 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது.இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நன்னாளை கொண்டாட இந்திய சினிமா பல்வேறு பாடல்களை வழங்கியிருக்கிறது. அவ்வாறான உணர்ச்சி மிகுந்த பாடல்களை இங்கு பார்க்கலாம்.
ரோஜா- தமிழா தமிழா
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
ஜெய்ஹிந்த் - தாயின் மணிக்கொடி
இசை - வித்யாசாகர்
இந்திரா - அச்சமில்லை அச்சமில்லை
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தியன் - கப்பலேறி போயாச்சு
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
படம் - பூமி
இசை - டி.இமான்
ஆல்பம் - வந்தே மாதரம்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
Movie - Chak De India Song
Music - Salim-Sulaiman
Movie -Shershah
முன்னதாக, குடியரசு தினத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் அனைத்து மாநிலத்தின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் விடுதலை போராட்டத்தை பறை சாற்றும் வகையில் போராட்ட வீரர்கள் அடங்கிய வாகன ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த வாகன ஊர்திகள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.
தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 வது சுற்று வரை சென்ற நிலையில், வேலுநாச்சியார் வ உசி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊர்திகள் இடம்பெற கோரிக்கை வைத்து பிரமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் தமிழ்நாடு ஊர்திகள் இடம்பெறாதது குறித்து காரணங்களை தெரிவித்துவிட்டோம். அதனால் அரசின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை என்று கூறியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை முன்வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்றும் தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பு வாகனம் நிராகரித்துவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனைக்கேட்ட நீதிபதிகள் மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக விளக்கம் அளித்துள்ளனர்.