'' விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடகர் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!"'

'ஓ மண பெண்ணே' 'உனக்கென வேணும் சொல்லு' 'நானும் ரெளடி தான்' போன்ற ஹிட் பாடல்களை கொடுத்த பென்னி இன்னும் பல பாடல்களை பாடி இசை ரசிகர்களை ரசிக்க வைக்க தமிழ் திரையுலகம் காத்து கொண்டிருக்கிறது. 

FOLLOW US: 

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான குரல் வளம், உடை வடிவமைப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் எதிரே அமர்ந்திருக்கும் எல்லாரையும் தன்னுடைய துள்ளல்  நடத்தின் மூலமாக கவர்ந்திழுக்கும் நபர் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பென்னி குறித்த விஷயங்கள் இந்த கட்டுரையில், 

' விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடகர் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
'' அடிப்படையில் மலையாளியான பென்னி தன்னுடைய ஸ்கூல் படிப்பை யு.ஏ.வில் முடித்தார். எப்போவும் துருதுருவென இருக்கும் இவருடைய கேரக்டருக்கு முக்கியமான காரணமே பென்னியோட அம்மாதான். அம்மாகிட்ட இருந்த நடன திறமை பென்னிக்கு அப்படியே வந்திருச்சுனு எப்போதும் பென்னி உடன் இருப்பவர்கள் சொல்வது உண்டு. தன்னுடைய பல நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'தில்சே' பாட்டை ஸ்கூல் பஸ்ல போனப்போ டிரைவர் போட இதை கேட்டுட்டு சினிமாவுல பாடணும்னு ஆசைப்பட்டேன்னு பென்னி சொல்லியிருக்கார். ஆனா, இதுக்கு முன்னவே பென்னி அஞ்சு வயசு பையனா இருந்தப்போ மைக்கேல் ஜாக்சன் கேசட்டை இவரிடம் கொடுத்து கேட்க சொல்லியிருக்கார் பென்னியோட அப்பா. இதை கேட்ட பென்னிக்கு மைக்கேல் ஜாக்சன் இசையோட சேர்ந்து இவரோட லைப் ஸ்டைலும் பிடிச்சு போயிருக்கு. 

' விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடகர் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இதன் காரணமாகவே மைக்கேல் ஜாக்சன் மாதிரியே தலையில தொப்பியும் போட ஆரம்பிச்சிருக்கார் பென்னி. தன்னுடைய குறைந்த பார்வையை சரி செய்ய கண்ணாடி போட ஆரம்பிச்ச பென்னிக்கு இதுவும் ஒரு அடையாளமாக மாறி போயிருச்சு. 
சின்ன வயசுல இருந்தே பாடகரா மாறணும்னு நினைச்சிட்டு இருந்த பென்னிக்கு அப்பா காலேஜ் படிப்பை முடிக்க சொல்லி வற்புறுத்தவே ஜர்னலிசம் தொடர்பான படிப்பை பென்னி முடிச்சிருக்கார். இதுக்கு அப்புறம் சென்னைக்கு வந்து தன்னுடைய பாடகர் கனவுகாக ஒவ்வொரு மியூசிக் ஸ்டூடியோவும் தேடி அலைந்த பென்னிக்கு யாருமே பாடகர் வாய்ப்பு கொடுக்கல. 

' விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடகர் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
பாடகர் ஆகணும்னா கண்டிப்பா நிறைய கஷ்டங்களை தாண்டிதான் ஆகணும்னு தெரிஞ்சிருந்த பென்னிக்கு மலையாளத்தின் 'பை தி பீப்ளில்' ஒரு அறிமுகத்தை கொடுக்கவே ஏ.ஆர்.ரஹ்மானால் கவனிக்கப்பட்டார் பென்னி. முதலில் ரஹ்மானின் கோரஸ் சிங்கரில் ஒருவராக இருந்த பென்னி பின்பு சினிமா பின்னணி பாடகராக ரஹ்மானால் அறிமுகப்படுத்தபட்டார். ரஹ்மான் இசையில் 'சிவாஜி' படத்தின் பல்லேக்கா பாடலை எஸ்.பி.உடன் சேர்ந்து பாடியிருப்பார் பென்னி. இதில் பென்னியோட வாய்ஸ் தனியா அடையாளம் தெரியவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹரீஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், வித்யாசாகர், யுவன்ஷங்கர் ராஜா, இமான் என பல முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி வருகிறார். 

' விஜய் சேதுபதிக்கு பிடித்த பாடகர் பென்னி தயாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ஒரு கலைநிகழ்ச்சியில விஜய் சேதுபதி, 'நான் உங்களின் ரசிகன் பென்னி'னு சொல்ல, 'சார், 'நானும் ரெளடி தான் டைட்டில் டிராக் பாடியிருக்கேன்னு' பென்னி பதில் சொல்ல, கட்டியணைத்து அன்பை பொழிந்து இருக்கிறார் விஜய் சேதுபதி. முக்கியமாக, இந்த பாட்டை ஸ்கைப் மூலமாக அனிருத் பென்னிக்கிட்ட இருந்து ரெக்கார்ட் செய்து வாங்கியிருக்கார்னு பலருக்கும் இங்கே தெரியாது. 
தமிழ் சினிமா பொருத்தவரைக்கும் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர் பென்னி. சொல்லபோனா சிவா சினிமாவுக்கு அறிமுகமாவதற்கு முன்பு இருந்தே பென்னியுடன் நட்பில் இருந்து வருகிறார். 'ஓ மண பெண்ணே' 'உனக்கென வேணும் சொல்லு' 'நானும் ரெளடி தான்' போன்ற ஹிட் பாடல்களை கொடுத்த பென்னி இன்னும் பல பாடல்களை பாடி இசை ரசிகர்களை ரசிக்க வைக்க தமிழ் திரையுலகம் காத்து கொண்டிருக்கிறது. 

Tags: Vijay Sethupathi tamil cinema benny dhayal music singer happy bday benny sivakarthiekyan

தொடர்புடைய செய்திகள்

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!