Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தென்னகத்தின் நைட்டிங்கேல்.

 Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி தனது 83-வது பிறந்தநாளை இன்று கொண்டாகிறார் .தமிழ் சினிமாவில் எவராலும் கடக்காமல் போகமுடியாத ஒரு குரல். 80-களில் தொடங்கி இன்று வரை இருக்கும் 2k கிட்ஸ் வரை அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு குரல் எஸ்.ஜானகி அம்மாவின் குரல் . இளையராஜா-ஜானகி என்ற பிரிக்க, மறக்க முடியாத காம்போ. 80-களில் வந்த எல்லா திரைப்படங்களில் ஜானகி அம்மா குரல் ஒலிக்காத படங்களே இல்லை. தமிழ் , கன்னட, தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி, கிட்டத்தட்ட 25 மொழிகளில் பாடியுள்ள பெருமை இவரையே சேரும். பல பாடல்களை தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

1957-ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு படத்தில் முதல் பாடல் வாழ்க்கையை தொடங்கினார் . அனால் இந்த பாடல் முதலாக வெளியாகவில்லை "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடிய பாடலே முதலில் வெளிவந்தது . ஜானகியின் குரல் 70 மற்றும் 80-களில்தான் அதிகம் கேட்கப்பட்டது . இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இவர் பாடிய மச்சானா பாத்திங்களா பாடல் பட்டி தொட்டி எங்கும் இளையராஜா மற்றும் ஜானகி இசைக் காம்பவை ஒலிக்கச் செய்தது. அங்கிருந்து இவர்களின் காம்போ வெற்றி காம்போவாகவே தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று சவுத் இந்தியன் சினிமா முழுக்க கேட்கப்பட்டது எஸ்.ஜானகியின் குரல் .Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

25- ஆண்டுகள் தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் கொங்கனி, துளு, சௌராஷ்ட்ஸ்ட்ரா,வங்காளம் ,சிங்களம்,ஆங்கிலம் , மற்றும் சீன மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார் .1992-ஆம் ஆண்டு சிங்களம் சென்றபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. மௌனப் போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக தனது பணியை தொடங்கினார் ஜானகி அம்மா. கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வெளியான "சிங்கார வேலனே தேவா " இவருக்கு வெற்றி பாடலாக அமைந்தது. இன்று வரை பலரால் பட முடியாத மிக கடினமான படலைகளில் இதுவும் ஒன்று. மிக நேர்த்தியாக மிக எளிதாக இந்தப் பாடலை பாடியிருப்பார் .Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தவர் ஜானகி. இருவரும் இணைந்து பாடிய அணைத்து பாடல்களுமே மிக பெரிய ஹிட் . எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது ஒவ்வொரு பேட்டியிலும் ஜானகி அம்மாவை பேசாமல் இருந்ததே இல்லை . இளையராஜா, யேசுதாஸ், ஜானகி அம்மா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வெளிவந்த பாடல்கள் 80-களின் பொக்கிஷம் . Happy Birthday Nightingale : பாடவா உன் பாடலை.. - இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகி அம்மா.. 

ரஹ்மான் அவர்களுடன் உயிரே படத்தில் "நெஞ்சினிலே" பாடல் , 2014-ஆம் ஆண்டு அனிருத் இசை அமைத்த விஐபி திரைப்படத்தின் "அம்மா அம்மா"  பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரால் பாடப்பட்ட பாடல். நான்கு தேசிய விருது , 11 கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள், 10 நந்தி விருதுகள் , 6 தமிழ் திரைப்பட விருதுகள் ,1 ஒடிசா மாநில திரைப்பட விருது. என்று அவர் வாங்கிய விருதுகள் அதிகம் . 2013-ஆம் ஆண்டு ஜானகி அம்மாவிற்கு "பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்த விருது என்று "பத்ம பூஷன் " விருதினை நிராகரித்தார் . 17 மொழிகளில் 16 ஆயிரம் பாடல்கள் பாடி அனைவரின் இதயங்களில் இடம்பிடித்தவர் இந்த தென்னகத்து நைட்டிங்கேல். 

Tags: Happy Birthday to Nightingale singer S Janaki amma South Indian Cinema

தொடர்புடைய செய்திகள்

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛விஷாலுக்கு எதிர்கால பயம்’ புகாருக்கு பதிலடி தந்த ஆர்.பி.செளத்ரி

‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

‛தேவர் மகன் டூ வாலி....’ மிஸ் செய்த படங்களை நினைத்து வருந்தும் நடிகை மீனா!

இரவுப் பொழுதை இனிமையாக்கும் ஸ்வர்ணலதாவின் தங்கக்குரல் பாடல்கள்!

இரவுப் பொழுதை இனிமையாக்கும் ஸ்வர்ணலதாவின் தங்கக்குரல் பாடல்கள்!

”The Family Man சீசன் 2, பொதுப்புத்தியின் வெளிப்பாடே” - சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரின் பதிவு..

”The Family Man சீசன் 2, பொதுப்புத்தியின் வெளிப்பாடே”  - சர்வதேச விருதுகள் பெற்ற குறும்பட இயக்குநரின் பதிவு..

Premam Movie: பிரேமம் கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? ரசிகரின் கேள்வியால் வெளிவந்த உண்மை !

Premam Movie: பிரேமம் கிளைமேக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? ரசிகரின் கேள்வியால் வெளிவந்த உண்மை !

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Tamil Nadu Coronavirus LIVE News : கொரோனா இறப்பு நிவாரணத் தொகை பெறுவதில் சிக்கல் - உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

ட்விட்டரில் பரிசு அறிவித்த அஸ்வின்; ஆர்வத்தில் கொட்டும் கமெண்ட்ஸ்!

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !

'இந்தி அச்சுறுத்தலை எதிர்ப்போம்' ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் !