மேலும் அறிய

Hansika Motwani: அழகியே Marry Me...ஈபிள் கோபுரம் முன்பு ஹன்சிகாவிடம் ப்ரோபோஸ் செய்த வருங்கால கணவர்..!

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு  நடிகர் ஹன்சிகாவிடம் அவரது வருங்கால கணவர் காதலை சொல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரம் சினிமாவுலகில் நுழைந்தார். கிட்டதட்ட 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் 2007 ஆம் ஆண்டு தேசமுதுரு  என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.  

இதனையடுத்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா நடித்திருந்த எங்கேயும் காதல் படம் அவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. பின்னர் விஜய், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜீவா, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

இதில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது முறிந்தது. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்தார். விரைவில் அவர் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியாகியுள்ளது. 

யார் இந்த சோஹைல் கதுரியா?  

ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன்  சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.  டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை இவர்களுடைய திருமண விழா நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget