![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Hansika Sohail: ஏர்போர்ட்டில் ஹனிமூன் குறித்த கேள்வி; சிரித்து நழுவிய ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ!
புதிதாக திருமணமான ஹன்சிகா, சோஹைல் கதுரியா ஜோடியின் புதிய புகைப்படங்கள் வைரலாகிறது!
![Hansika Sohail: ஏர்போர்ட்டில் ஹனிமூன் குறித்த கேள்வி; சிரித்து நழுவிய ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ! Hansika Motwani Sohail Kathuria Spotted at Airport Recently Couple Looked Adorable See Beautiful Couple Photos Hansika Sohail: ஏர்போர்ட்டில் ஹனிமூன் குறித்த கேள்வி; சிரித்து நழுவிய ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/edb4c4d328a60633f183c7c7e6bda3c31670403218790501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுடன் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே டிசம்பர் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
View this post on Instagram
இதனையடுத்து நவம்பர் 2 ஆம் தேதி ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அவர்களின் காதலை உறுதிப்படுத்தினார். கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ஹன்சிகா மற்றும் சோஹேலின் திருமணத்திற்கு முந்தைய மத சடங்குகள் (Mata Ki Chowki) கோலாகலமாக தொடங்கின. கடந்த 2 ஆம் தேதி சூஃபி இசைக்கச்சேரியுடன் தொடங்கிய திருமண சடங்குகள் தொடங்கின.
View this post on Instagram
தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 4 -2022 இரவு ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் ஹன்சிகா, சோஹைல் கதுரியா ஜோடியின் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ஹனிமூனைப்பற்றி நடிகை ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் வெட்கப்பட்டு சிரித்தார்.
Newly Married #HansikaMotwani with husband at Airport arrival. #Viralvideo pic.twitter.com/bXA8PyuLHY
— Talora Maahi (@TaloraMaahi) December 7, 2022
இந்த க்யூட் தம்பதியின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு காட்டு தீ போல பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)