Good Luck Jerry OTT: இந்தியில் ஜூலை 29ல் ரிலீசாகிறது கோலமாவு கோகிலா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Good Luck Jerry OTT Release Date: தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக் படம் குட்லக் ஜெர்ரி. இப்படம் வரும் ஜூலை 29ம் தேதி ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்படும் படக்குழு தெரிவித்துள்ளது.
Good Luck Jerry OTT Release Date: தமிழில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீ மேக் படம் குட்லக் ஜெர்ரி. இப்படத்தினை வரும் ஜூலை 29ம் தேதி டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
Poore gang ko expose kar diya?! Good luck, Jerry!#GoodLuckJerry streaming from 29th July on @DisneyPlusHS#DisneyPlusHotstarMultiplex #GoodLuckJerryOnHotstar@Sen_sidd #PankajMatta #Janhvikapoor #DeepakDobriyal #MitaVasisht pic.twitter.com/qBSWJeMDlR
— Lyca Productions (@LycaProductions) July 12, 2022
தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் யோகி பாபு நடித்த படம் கோலமாவு கோகிலா. இதில் சரண்யா பொன்வண்ணன், வடிவேல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். டிஷ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியானது. தமிழில் இந்த படம் ஹிட் அடித்ததால், படத்தினை இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், ஜன்வீர் கபூர் நடித்துள்ளார்.
இப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்ட இப்படத்தில், நயன்தாராவின் கதாப்பாத்திரத்தில், பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். லைகா புரடெக்ஷன்ஸ், கலர் எல்லோ புரடெக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்தினை இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியனபோது, இந்தி திரைப்பட வட்டாரத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்த போஸ்டரில் ஜான்வி கபூர் துப்பாக்கியில் சுடுவதற்கு தயாராக இருக்கும்படியாக இருப்பார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்