இளையராஜா பாடல் சர்ச்சை! அஜித்தின் குட் பேட் அக்லி.. Netflix-ல் இருந்து அதிரடி நீக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
. இந்த படத்தில் இளையராஜாவின் என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன் ஆகிய இளையராஜாவின் ஹிட் பாடல்கள் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் காப்பிரைட்ஸ் விவகாரம் தொடர்பாக அந்த படத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ஸ்டீரிமிங் செய்வதை நிறுத்தியுள்ளது.
குட்பேட் அக்லி:
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த ஏபரம் மாதத்தில் வெளியாக திரைப்படம் குட் பே அக்லி ந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன். ரஜினிகாந்தின் ‘கூலி’ கூட தமிழகத்தில் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக போஸ்டர் வெளியானது. அதோடு, இந்த படத்தை நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் உரிமை விவகாரம்:
‘குட் பேட் அக்லி’ படத்தில், தனது அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதற்கு படக்குழு தரப்பில் பாடலில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று தான் படத்தில் பாடலானது வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக கூறப்பட்ட உரிமையாளர் யார்? என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தகவல் வழங்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால தடை உத்தரவு
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா இசையில் முன்பு வெளியான 3 பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தார் நீதிபதி என். செந்தில்குமார். அதேசமயம், தயாரிப்பு நிறுவனம் தனது பதிலை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதாக, இளையராஜா தரப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாடல்களை உடனடியாக நிறுத்தி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடஃபிளிக்ஸ்சில் இருந்து நீக்கம்:
இந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படத்தையே நீக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக நயன்தாராவின் அன்னபூரணி படம் சர்ச்சைகள் காரணமாக ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இளையராஜாவின் என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன் ஆகிய இளையராஜாவின் ஹிட் பாடல்கள் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





















