அஜித் சார்கூட வாக்கிங் போனேன்..அப்போ அவர் சொன்ன ஒரு வார்த்த...இயக்குநர் ஆதிக் ஓப்பன்
நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் சார் சொன்னதை தன் வாழ்க்கையை மாற்றிய தருணம் என குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , ஜாக்கி ஷ்ராஃப் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
குட் பேட் அக்லி முன்பதிவு வசூல்
குட் பேட் அக்லி படத்தின் முன்பதிவுகள் சில நாட்கள் முன்பு தொடங்கியது. தற்போது நிலவரப்படி பெரும்பாலான திரையரங்குகள் முதல் நாளில் ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கின்றன. தற்போது வரை முன்பதிவுகளில் இப்படம் 18 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் சொன்ன ஒரு வார்த்தை
தற்போது இப்படத்திற்கு தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். நேர்காணல் ஒன்றில் அஜித் பற்றி ஆதிக் பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. " நான் சின்ன வயதில் இருந்தே அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். அஜித்தின் வீட்டு முன் நின்று அவரது வீட்டு சுவற்றைப் பார்த்து கதறி அழுதிருக்கேன். அந்த வயதில் என்ன தோன்றிய அதை வைத்தே படம் எடுத்தேன். வருடத்திற்கு ஒரு படம் எடுத்து ஹிட் கொடுத்து என்னை பாதுகாப்பாக தக்க வைத்துக்கொள்வது தான் என்னுடைய நோக்கமாக இருந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் போது அஜித் சாருடன் ஒரு வாக்கிங் போகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அஜித் என்னிடம் நீ இன்னும் பெரிய விஷயங்களை செய்ய வேண்டும். உன்னால் முடியும் என்று எனக்கு தெரியும் என்று சொன்னார். அவ்வளவு பெரிய நடிகர் வந்து உங்களிடம் இப்படி ஒரு வார்த்தை சொன்னால் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது தான் நல்லது. என் வாழ்க்கையை அஜித் சாரை பார்ப்பதற்கு முன்பு பார்ப்பதற்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம் " என ஆதிக் தெரிவித்துள்ளார்

