NAB கண்காட்சியில் கமல்ஹாசன் - புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி

சினிமா துறையில் கமல்ஹாசனுக்கும் இருக்கும் காதல், அவரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. தமிழ் சினிமாவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியது, புதிய முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவற்றை முன்னெடுத்தவர்.

சினிமாவில் நடிப்பு மட்டும்மல்லாமல் திரைக்கதை, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படுபவர். அதுவும் கமல்ஹாசனுக்கென தனித்துவமிக்க ஒரு ஸ்டைல் எல்லாவற்றிலும் இருக்கும்.

Published by: ஜான்சி ராணி

சினிமாவில் கிடைக்கும் பணத்தை சினிமா துறைக்கே செலவழிப்பவர். இவரது நடிப்பை கொண்டாடும் நடிகர்கள் ஏராளம்.

கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.

லாஸ் வேகஸில் நடைபெற்ற ’National Association of Broadcasters' கண்காட்சியில் கமல்ஹாசல் பங்கேற்றது குறித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் தொழில்நுட்பங்கள். ஏ.ஐ. தொழில்நுட்பங்கள், கேமரா உள்ளிட்டவை குறித்து வளர்ச்சி பற்றி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சினிமா துறையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் கமல்ஹாசல் ஆர்வம் கொண்டவர்,

ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை கொண்டாடி வருகின்றனர்.