குட் பேட் அக்லி மிரட்டல் வெற்றி.. கார் ரேஸில் அசத்தல் வெற்றி.. கனவெல்லாம் பலிக்குதே மோடில் அஜித் ரசிகர்கள்
குட் பேட் அக்லி படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி, அஜித்தின் சர்வதேச கார் பந்தய வெற்றி ஆகியவற்றால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். நடிகர், துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இவர் தற்போது முழுக்க முழுக்க கார் பந்தயத்தில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
குட் பேட் அக்லி தந்த கொண்டாட்டம்:
நடிகர் அஜித்திற்கு இந்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது.
இதன்பின்பு, கடந்த 10ம் தேதி ரிலீசான குட் பேட் அக்லி படம் பல ஆண்டுகால அஜித் ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்த படமாக அமைந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் அமைந்தது மட்டுமின்றி இதுவரை 200 கோடிக்கும் மேல் இந்த படம் வசூலை குவித்துள்ளது.
கார் பந்தயத்தில் கலக்கல் வெற்றி:
திரைப்படத்தின் வெற்றி ஒரு பக்கம் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த, அஜித் கடந்த ஒரு ஆண்டாகவே அவர் முழுக்க முழுக்க சர்வதேச கார் பந்தயத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். துபாயில் அஜித்குமார் ரேஸிங் அணி என்ற பெயரில் தனது அணியினருடன் களமிறங்கிய அஜித் அணி 3வது இடம்பிடித்து அசத்தியது.
இதன்பின்பு, ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் 2வது இடம் பிடித்து அசத்திய அஜித்தின் கார் பந்தய அணி பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தய போட்டியிலும் 2வது இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளனர்.
மட்டற்ற மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்:
திரைப்படம் தந்த வெற்றியை காட்டிலும் அஜித் சர்வதேச அரங்கில் வெற்றிகளை குவிப்பதும், அவரை காண ரசிகர்கள் அங்கும் குவிவதும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் மேலும் பல சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்திற்கு நடிப்பை காட்டிலும் கார் பந்தயமே முதன்மை தேர்வு என்று அவரது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும். மோட்டார் பந்தயத்திற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் மாடலிங்கிற்கு வந்த அஜித் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கோலிவுட்டில் கம்பேக்:
பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் ஆகிய இயக்குனர்களுடன் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அஜித் இந்தாண்டு இறுதியில் மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

