Ajith New Car : இப்போதான் Ferrari கார் வாங்கினார்.. இப்போ Porsche.. அஜித் வாங்கியிருக்கும் காரின் விலை இவ்ளோவா?
நடிகர் அஜித் குமார் ரூ.3.5 கோடி மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். காருடன் அஜித் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ரூ.3.5 கோடி மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார் அஜித். காருடன் அஜித் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது
அஜித் குமார்
நடிகர் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
சினிமா தவிர்த்து அஜித் குமார் பைக்கில் தனது குழுவுடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அஜித் துபாயில் ரூ.9 கோடி மதிப்புள்ள சிவப்பு நிற ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார். தற்போது மீண்டும் புதிய கார் ஒன்றை அஜித் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். Porsche GT3 RS ரகத்தைச் சேர்ந்த இந்த காரை அஜித் ரூ.3.5 கோடிக்கு சொந்தமாக்கி இருக்கிறார். காருன் அஜித் நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Congratulations to #AjithKumar for his brand new Porsche GT3 RS worth ₹3.51 cr [ex showroom]. pic.twitter.com/rDRioZXV45
— Manobala Vijayabalan (@ManobalaV) September 13, 2024
அஜித் கார் கலெக்ஷன்
தன் சிறு வயதில் இருந்தே பைக் மற்றும் கார்களின் மீது அதீத பிரியம் கொண்டவர் அஜித். மார்கெட்டில் ஒரு புது ரக வாகணம் வந்தது என்றால் அதைப் பற்றிய எல்லா தகவல்களையும் அஜித் உடனே தெரிந்துகொண்டு விடுவார். கடந்த ஆண்டு சொந்தமாக பைக் டூர் ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றையும் அஜித் தொடங்கினார். பைக் ரைடர்களுக்கு முறையான பயிற்சியளிக்கப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்பாடுகள் செய்து பைக் சுற்றுலாவை இந்த நிறுவனம் ஒருங்கிணைத்து வருகிறது. அஜித்திடம் ஏற்கனவே 34 கோடி மதிப்பிலான லம்போர்கினி உள்ளது. இது தவிர்த்து ஒரு லேண்ட் ரோவர் டிஸ்கவரி , பென்ஸ் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார். தற்போது அவருடைய கார் கலெக்ஷனில் புதிதாக வாங்கியுள்ள போர்ஷி இணைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

