மேலும் அறிய

Genelia: கணவர் சொன்ன வார்த்தை.. மேடையில் கதறி அழுத ஜெனிலியா.. என்ன நடந்தது?

ரித்தேஷ் தேஷ்முக் சொன்ன வார்த்தைகளை கேட்டு அருகில் நின்றிருந்த ஜெனிலியா நெகிழ்ந்துபோய் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.

ராஜா சிவாஜி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது கணவரை நினைத்து ஜெனிலியா கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராஜா சிவாஜி படமானது வரும் மே 1ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கதையை வெள்ளித்திரைக்குக் கொண்டு வருவதில் எதிர்கொண்ட சவால்களை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் விவரித்தார். அதேசமயம் தனது கனவுக்கு ஆதரவளித்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். 

அப்போது ரித்தேஷ் தேஷ்முக் சொன்ன வார்த்தைகளை கேட்டு அருகில் நின்றிருந்த ஜெனிலியா நெகிழ்ந்துபோய் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அதன் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இதனைப் பார்த்த ரித்தேஷ் தேஷ்முக் தனது பேச்சை சற்று நிறுத்தி அவரது அழுகையை கட்டுப்படுத்தினார். மேலும் தனது கனவுகளுக்கு ஜெனிலியாவே மிகப்பெரிய ஆதரவு என புகழாரம் சூட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், நான் கடந்த 2016ம் ஆண்டு சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். பத்து வருடங்கள் ஆகியும் அது நடக்கவில்லை. இடையில் மீண்டும் முயற்சித்தேன். ஆனால் கொரோனா காரணமாக முடியவில்லை. அப்போது சிவாஜி மகாராஜா என்னிடம் இது படம் நடிக்க சரியான நேரம் இல்லை என சொல்வது போல இருந்தது. இந்தமுறை உனக்கான சரியான நேரம் இதுதான் என சொல்வது போல இருந்தது. 

கனவு காண்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல... யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் நீங்கள் கனவு காணும்போது எனக்கு துணையாக நின்றவர் ஜெனிலியா. என் மீது நம்பிக்கை வைத்து இந்த கனவை நனவாக்கினார் என தெரிவித்தார். 

ராஜா சிவாஜி படத்தின் விவரம்

ராஜா சிவாஜி படத்தில் அபிஷேக் பச்சன், வித்யா பாலன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், பாக்யஸ்ரீ, சச்சின் கெடேகர், ஃபர்தீன் கான், ஜிதேந்திர ஜோஷி மற்றும் அமோல் குப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஜெனிலியா மட்டுமல்லாமல் சல்மான் கான் இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஆனால் படம் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

மராட்டியப் பேரரசைச் சீர்குலைக்க முயன்ற எதிரிகளுக்கு எதிராக சிவாஜி நடத்திய போர்களை கதைக்களமாக எடுத்துக் கொண்டு விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் பிரமாண்டமான வரலாற்று பின்னணியுடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜா சிவாஜி திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை ஃபிலிம் கம்பெனி ஆகியவை இணைந்து தயாரிக்கின்றது. ஜெனிலியாவும் இதன் இணை தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget