Garudan : கருடன் வெற்றிமாறன் கதையே இல்லை.. துரை செந்தில்குமார் அதிர்ச்சி தகவல்
கருடன் படம் வெற்றிமாறனின் கதையே இல்லை. அது சூரியின் ஐடியா என்று இயக்குநர் துரை செந்தில் குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருடன்
சூரி நடித்து துரை செந்திகுமார் இயக்கியுள்ள கருடன் படம் நாளை மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சசிகுமார் , உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படத்தைத் தொடர்ந்து நடிகர் சூரி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார், இன்னும் குறிப்பிட்டு சொன்னால் ஆக்ஷன் ஹீரோவாக சூரி களமிறங்கும் முதல் படம் கருடன். இப்படத்தின் கதை வெற்றிமாறன் எழுதியது என்று படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் குறிப்பிடப்பட்டது.
இதனால் கருடன் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் தற்போது கருடன் படம் வெற்றிமாறனின் கதை இல்லை அது சூரியின் ஐடியா என்று படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருடன் வெற்றிமாறனின் கதை இல்லை
படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படி பேசியுள்ளார் “வெற்றிமாறன் அதிகாரம் என்று கதை என்னிடம் சொன்னார். நான் அந்த படத்திற்கான திரைக்கதை வேலைகளில் இருக்கிறேன். ஆனால் கருடன் படம் வெற்றிமாறனின் கதை இல்லை. இந்தப் படத்திற்கான ஐடியா சூரியுடையது. அந்த ஐடியாவை நானும் என்னுடைய உதவி இயக்குநர்களும் சேர்ந்து எழுதினோம். படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்திருந்தது. ஒரு ப்ரோமோஷனுக்காக இந்தப் படத்தின் கதையாசிரியர் பெயரில் வெற்றிமாறனின் பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம் .
வெற்றிமாறன் அதற்கு சம்மதித்தார். ஒரு சில ஆலோசனைகளை மட்டும் அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் கதை அவருடையது இல்லை" என்று துரை செந்தில் குமார் கூறியுள்ளது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Garudan’s core idea was from @sooriofficial and later @Dir_dsk developed the script. The film wasn’t penned by #Vetrimaaran as promoted by the makers. The director candidly accepted that they used vetri’s name!
— Rajasekar (@sekartweets) May 29, 2024
Full interview -> https://t.co/HzECqnhmPg pic.twitter.com/kM4u3FE4gU
வெற்றிமாறனின் பெயரை பயன்படுத்தி படத்தின் மீது கவனத்தை ஈர்ப்பது ஒரு புது டெக்னிக் ஆக மாறி வருவதாகவும் . இந்தப் படத்தின் ஐடியா சூரியுடையது என்றால் அவருக்கு உரிய அங்கீகாரத்தை படக்குழு கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : Mookuthi Amman 2: நயனுக்கு No சொல்லிய ஆர்.ஜே.பாலாஜி - “மூக்குத்தி அம்மன்” ஆக மாறும் திரிஷா!