OTT Release : ஃபைட் கிளப் முதல் அனிமல் வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! இதோ லிஸ்ட்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை கீழே விரிவாக பார்க்கலாம்.
விஜயகுமார் நடித்த ஃபைட் கிளப் முதல் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படம் வரை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.
ஃபைட் கிளப்
உறியடி விஜயகுமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஃபைட் கிளப். அபாஸ்.ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம், சரவண வேல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது
அனிமல்
View this post on Instagram
ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானப் படம் அனிமல். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், த்ரிப்தி டிம்ரி உள்ளிட்ட்வர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். வரும் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் இப்படம் வெளியாகிறது.
ஏஜண்ட்
அகில் அக்கினேனி, மம்மூட்டி, தினோ மெளர்யா, சாக்ஷி வைத்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ஏஜண்ட். ஸ்பை த்ரில்லர் படமாக உருகாகியுள்ள இந்தப் படம் சோனி லைவ் தளத்தில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.
நேரு
மோகன்லால் , பிரியாமணி நடித்து கடந்த ஆண்டு வெளியானப் படம் நேரு, திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற நேரு படம் வரும் இன்று ஹாட்ஸ்டாரில் வெளியானது.
அக்வாமேன் - தி லாஸ்ட் கிங்டம் ( Aquaman - The lost Kingdom)
View this post on Instagram
அக்வாமேன் படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது அக்வாமேன் தி லாஸ்ட் கிங்டம். ஜேசன் மமொவா, ஆம்பர் ஹர்ட் , பாட்ரிக் வில்சன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தி நடித்துள்ளார்கள். பல்வேறு போராட்டஙகளுக்கு இடையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வரும் இன்று புக் மை ஷோ ஸ்ட்ரீம் தளத்தில் வெளியாகிறது.
பேட்லேண்ட் ஹண்டர்ஸ் (Badland Hunters )
எதிர்காலத் தென்கொரியாவை மையமாவ வைத்து உருவாக்கப் பட்டிருக்கும் ஃபேண்டஸி படம் பேட்லேண்ட் ஹண்டர்ஸ் . வரும் ஜனவரி 26 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
சாம் பகாதூர்
சாம் பகாதூரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள படம் சாம் பகாதூர். விக்கி கெளஷல் இப்படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜனவரி 26 ஆம் தேதி ஜீ ஃபைவில் வெளியாகிறது.
View this post on Instagram