மேலும் அறிய

Kamal Haasan: உயர்ந்த உள்ளம் படத்தில் ஒரு கையால் சண்டை போட்ட கமல்.. 28 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை..!

உயர்ந்த உள்ளம் படத்தில் கமல் ஏன் ஒரு சண்டைக் காட்சியில் வித்தியாசமாக நடித்தார் என்ற தகவலை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உயர்ந்த உள்ளம் படத்தில் கமல் ஏன் ஒரு சண்டைக் காட்சியில் வித்தியாசமாக நடித்தார் என்ற தகவலை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த உயர்ந்த உள்ளம்

கடந்த 1985 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குநர்களின் முன்னோடி என அழைக்கப்படும்  எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘உயர்ந்த உள்ளம்’. ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய நிலையில் இளையராஜா இசையமைத்திருந்தார்.  வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். 

கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருக்கும் கமலிடம் வேலையாளாக சேர்ந்து பணத்தை அபகரிப்பார் நண்பர் ராதாரவி. அதேசயம் வீட்டு வேலைக்காரர் நாகபிள்ளையின் உறவுக்கார பெண் அம்பிகா மீது கமல் காதல் வயப்படுவார். சொத்துக்களை எல்லாம் இழந்து நிற்கதியான நிலையில் நாகபிள்ளை வீட்டில் அடைக்கலமாவார். பின்னர் அம்பிகா உதவியால் ஆட்டோ ஓட்டுவார். இந்த மோசமான உலகத்தை புரிந்து கொள்ளும் கமல், தனது உயர்ந்த உள்ளத்தால் அனைவரிடமும் பாராட்டைப் பெறும் காட்சிகளோடு இந்த கதை அமைக்கப்பட்டிருக்கும். 

இளையராஜா இசையில் எங்கே என் ஜீவனே, காலைத் தென்றல், வந்தாள் மகாலட்சுமியே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் 50வது படமாகும். ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் உயர்ந்த உள்ளம் படம் வெற்றியைப் பெற்றது. 

ரகசியத்தை போட்டுடைத்த ஏவிஎம் நிறுவனம்

இதனிடையே தான் தயாரித்த படங்களில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை அவ்வப்போது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் ஏவிஎம் நிறுவனம் “உயர்ந்த உள்ளம்” படம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் மதுபான விடுதியில் ஒரு சண்டை காட்சி இடம் பெற்றிருக்கும். இதில் கமல் வித்தியாசமாக சண்டை போட்டிருப்பார். அதாவது இடதுகையை மட்டுமே உபயோகித்திருப்பார். அதற்கான காரணம் என்ன என்பதை ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதாவது, “உயர்ந்த உள்ளம் படப்பிடிப்பிற்கு முன்னதாக கமலின் வலது கையில் காயம் ஏற்பட்டது. சண்டைக் காட்சிக்காக அவர் வந்தபோது, ​​ஜூடோ ரத்தினம் சார் மற்றும் எஸ்பி முத்துராமனிடம் காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, திட்டமிட்ட காட்சியில் ஒரு ஷாட்டைக் கூட மாற்ற வேண்டாம் என  என்று கூறினார். மேலும் தன்னால் திட்டமிட்டபடி முழு காட்சியையும் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.  ஆனால் அவரது இடது கையால் அதைச் செய்தார்! படத்தில் நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவருடைய வலது கை பயன்படுத்தப்படாமல் இருப்பதை என்பதை நீங்கள் காணலாம். திட்டமிட்ட காட்சியை 100% ஒரு கையால் செயல்படுத்தும் இந்த திறமையைக் கொண்டிருப்பது மேஜிக் தான்” என ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget