National award 2025 - இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு?
2024ல், வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள், இந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஆண்டு தேசிய விருது பெற தகுதியான கலைஞர்களின் ஒரு சிலர் பட்டியலைப் பார்க்கலாம்
நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மகாராஜா. சிறந்த இயக்குநருக்கான பிரிவில் இயக்குநர் நிதிலன் மற்றும் சிறந்த நடிகருக்கான பிரிவில் விஜய் சேதுபதியும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
தெருக்கூத்து கலைஞர்களைப் மையமாக வைத்து உருவான படம் ஜமா. கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய படத்திற்கான பிரிவில் இந்த படம் தேசிய விருதுக்கு தேர்வாகும் என எதிர்பார்க்கலாம்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பிரிவில், மாரிசெல்வராஜ் இயக்கிய வாழை படத்தில் நடித்த பொன்வேல் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா திரைப்படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், கலை இயக்குநர் மிலனின் திறமை வியக்கத்தக்கது. விடாமுயற்சி படத்தின் போது மிலன் உயிரிழந்தார். இந்த ஆண்டு தேசிய விருதுகளில் அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதில் நடித்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் என ஒரு படத்தின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தேசிய விருதுக்கு தகுதியாவர்கள் என கூறப்படுகிறது