மேலும் அறிய

Nayanthara Unknown facts: நயன்தாராவாக மாறிய டயானா.. முதலாளியாக மாற்றிய லிப்பாம் கம்பெனி.. நயனை பற்றி நீங்கள் அறியாதவை!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 38வது பிறந்தநாளான இன்று அவரை பற்றி அறியாத விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

 

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவரான நடிகை நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் நயனுக்கு ஒரு சிறப்பான பிறந்த நாளாக அமையும் ஏனென்றால் தனது கணவருடனும் குழந்தைகளுடனும் கொண்டாடும் முதல் ஸ்பெஷல் பிறந்தநாள். நயனின் சினிமா வாழ்க்கை குறித்து நாம் அனைவரும் அறிவோம் ஆனால் இந்த பியூட்டி பற்றி நாம் அறியாத சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

 

Nayanthara Unknown facts: நயன்தாராவாக மாறிய டயானா.. முதலாளியாக மாற்றிய லிப்பாம் கம்பெனி.. நயனை பற்றி நீங்கள் அறியாதவை!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை முத்திரை பதித்தவர் நயன்தாரா. தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள நடிகை நயன்தாரா, தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் பிரபலமானவர்.

தற்போது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் பாலிவுட்டிலும் என்ட்ரியாகிறார். அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் நுழைகிறார். மாஸ்  ஹீரோக்களின் படங்களுக்கு எந்த அளவிற்க்கு திரையரங்குகளில் என்ட்ரி இருக்குமோ அதே அளவிற்கு ஒரு வுமன் சென்ட்ரிக் திரைப்படத்திற்கு ரசிகர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்ற ஒரே நடிகை நயன். ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவர். 

நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்:

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதையுடன் அடங்கிய திருமண வைபவத்தின் வீடியோ டாக்குமெண்டரி ஸ்டைலில் விரிவாக நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. கடந்த ஜூன் மாதம் இந்த காதல் ஜோடியின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.  

 

 

நயனின் உண்மையான  பெயர் :

ஒரு மலையாள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர் டயானா மரியம் குரியன்.  ஆகஸ்ட் 2011 ல் சென்னையில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் இந்துவாக மதம் மாறினார். அதற்கான சான்றிதழையும் கோயில் நிர்வாகம் அளித்துள்ளது. அப்படி தான் டயானா பெயர் அதிகாரபூர்வமாக நயன்தாராவாக மாறியது. 

 

திரைத்துறை அறிமுகம் :

நயன்தாரா சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் 2003ம் ஆண்டு ஒரு மாடலாக பயணத்தை தொடங்கினார். முதலில் அவர் 'மனசினகாரே' எனும் மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். திரைத்துறையில் நயன் நுழைந்த 20 ஆண்டுகளில் இதுவரையில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். 

 

ஷாருக்கான் படத்தில் ஸ்பெஷல் நம்பர் :

நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் 1234... என தொடங்கும் ஒரு ஸ்பெஷல் நம்பர் பாடலுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள விரும்பாத நயன் மறுத்துவிட்டதால், அந்த வாய்ப்பு நடிகை பிரியாமணிக்கு சென்றது. அன்று ஷாருக்கான் படத்தில் டான்ஸ் ஆட மறுத்த நயன், இப்போது ஜவான் திரைப்படம் மூலம் ஜோடியாகிறார். 

நயனின் சொந்த நிறுவனங்கள் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் நயனுக்கு சொந்தமாக ஒரு லிப் பாம் கம்பெனியும் உள்ளது. அதை தனது ஸ்கின் கேர் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து நடத்தி வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.     


நயன் குவித்த விருதுகள் :

நயன்தாராவின் சிறப்பான நடிப்பிற்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அதில் கலைமாமணி விருது, ஆனந்த விகடன் விருது, தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது, பாரதமுனி விருது, ஹிந்து வேர்ல்ட் ஆஃப் வுமன் விருதுகள் மிகவும் ஸ்பெஷலானவை.  

 

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget