மேலும் அறிய

Actor Vijay: ஒரே ஒரு சம்பவத்தால் பிரிந்த விஜய்யின் நட்பு.. வேதனையைப் பகிர்ந்த நடிகர் பிர்லா போஸ்...

தருமபுரி மாவட்டம் பாலகோட்டைச் சேர்ந்த இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு போலீசாக நினைத்துள்ளார்.

பொதுவாக வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிப்பவர்களை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கேரக்டருக்கு ஏற்ற மாதிரி தோற்றம் கொண்டவர்களை அடுத்த சீரியல், அல்லது படங்களில் இந்த கேரக்டரில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நாமே பரிந்துரை செய்யும் அளவுக்கு பிரபலமாவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பிர்லா போஸ். 

தருமபுரி மாவட்டம் பாலகோட்டைச் சேர்ந்த இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு போலீசாக நினைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த பிர்லா போஸூக்கு போலீஸ் வேலை கிடைக்கவில்லை. அதனால் படிப்பு சார்ந்த வேலைக்கு செல்ல முடிவெடுத்த நிலையில், பிர்லா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதுவே வெறும் போஸ் ஆக இருந்த அவரை பிர்லா போஸ் ஆக மாற்றியது. 

சினிமாவுக்கு வருவதற்கு முன் வாழ்க்கையில் பல விஷயங்களில் எடுத்த போராட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. அதனால் இதையும் ஒரு கை பார்த்து விடுவோமே என்ற எண்ணத்தில் திரைத்துறைக்குள் அடியெடித்து வைத்துள்ளார். 

விஜய்யுடனான நட்பு

”எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக யாரிடம் கனெக்ட் ஆக மாட்டார். ஆனால் கனெக்ட் ஆகிவிட்டால் அவர்களை விட்டு பிரியவும் மாட்டார். ஆனால் அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது. கண்டிப்பாக அதுக்கு காரணம் நான் இல்லை என்பதை இந்த நேர்காணல் மூலமாக சொல்லிக் கொள்கிறேன். 

சிவகாசி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தின் இயக்குநர் பேரரசு என்னை வர சொல்லியிருந்தார். நானும் போனேன். அப்போது விஜய்யுடன் ஒருவர் இருந்தார். அவர் ஏற்கனவே சுக்ரன் படத்தின் போது விஜய்யுடன் இருப்பதாக கூறி தானாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் இந்த ஷூட்டிங்கில் அவரை பார்த்ததும் நான் என்ன சார் நல்லா இருக்கீங்களா? என கேட்டேன். 

உடனே என்னை பார்த்து, வாய்ப்பு வேணும்னா எதுக்கு இங்கே வர்றீங்க? ப்ரொடியூசர் ஆபீஸ்ல போய் பாருங்க என அந்த நபர்  கூறிவிட்டார். இவர் ஏன் இப்படி நடக்கிறாரு என நினைத்த நிலையில் எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் விஜய் பாடலுக்கு நடனமாட சென்று விட்டார். பின் இந்த பிரச்சினையில் வெளியே வெயிலில் நின்று கொண்டிருந்தேன். ஷூட் முடித்து வந்த விஜய், ஏன் வெளியே நிற்கிறாய்? உள்ளே வா என அழைத்தார். அப்படிப்பட்ட நட்பு எங்களுடையது. 

ஆனால் நான் நடந்த சம்பவத்தை நினைத்து அவர் பேச்சை கேட்கவே இல்லை. எந்த வித ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. இதை இப்போது நினைத்தால் குழந்தைத்தனமாக இருக்கிறது. எனக்கும் அந்த நபருக்கும் சண்டை நடந்தது விஜய்க்கு தெரியாது” என பிர்லா போஸ் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget