மேலும் அறிய

RIP Marimuthu : ’வாங்குன வீட்டைப்பத்தியே பேசுவார்.. வீட்டுக்கு குடிபோறதுக்கு முன்னமே போய்ட்டார்’ : கவிதா பாரதி உருக்கம்..

Ethirneechal Marimuthu: இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் மறைந்த மாரிமுத்துவிற்கு இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ’உண்மையில் கடுமையான எதிர் நீச்சல் போட்டுத்தான் வென்றார். பார்க்கும்போதெல்லாம் தான் வாங்கியிருக்கும் வீட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார், தன் கனவு வீட்டில் குடியேறுவதற்கு முன்னரே விடைபெற்றுவிட்டார் இயற்கையை வெல்லும் வல்லமை கனவுகளுக்கு இல்லையே’ என மிகவும் வருத்தத்துடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

RIP Marimuthu : ’வாங்குன வீட்டைப்பத்தியே பேசுவார்.. வீட்டுக்கு குடிபோறதுக்கு முன்னமே போய்ட்டார்’ : கவிதா பாரதி உருக்கம்..
 
இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது.  இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி, வாய் நிறைய இவரின் ‘இந்தா மா ஏய்’ என்ற வார்த்தையை ஒருமுறையாவது உச்சரித்து இருப்பார்கள். எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியை காட்டிலும் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, அதிக ரசிகர்களையும் இவர் பக்கம் கொண்டு வந்தது. ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த அளவிற்கு மக்கள் ரசிப்பதற்கு மாரிமுத்துவின் அசாத்திய நடிப்பு திறமைதான் காரணம்.
 
சோஷியல் மீடியாக்களில் இவரின் ஏராளமான Thug லைஃப் மீம்களை பகிர்ந்த நெட்டிசன்கள் இவரை கொண்டாடி வந்த நிலையில், தற்போது இவரின் சோக செய்தியையும் வருத்தத்துடன் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

யார் இந்த மாரிமுத்து..? 

’அரண்மனை கிளி’ (1993) மற்றும் ‘எல்லாமே என் ராசாதான்’ (1995) போன்ற ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மாரிமுத்து. அதன்பிறகு, ஓரிரு திரைப்படங்களையும் இயக்கிய இயக்குநர் மாரிமுத்து 'யுத்தம் செய்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’எதிர் நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடம் பிரபலமானார். 


Ethirneechal Marimuthu:'ஏதோ கெட்டது நடக்கப்போகுதுன்னு தோணுது’ .. மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் வீடியோ இணையத்தில் வைரல்

Ethirneechal Marimuthu : சென்னையை நோக்கிய கனவுப் பயணம்.. எதிர்நீச்சல் மாரிமுத்து இயக்கிய படங்கள் பற்றி தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget