![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Entertainment Headlines July 29: விவாதப் பொருளான ‘சூப்பர் ஸ்டார்’, ஜெயிலர் விழா...சூப்பரான ‘லியோ’ அப்டேட்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today July 29: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
![Entertainment Headlines July 29: விவாதப் பொருளான ‘சூப்பர் ஸ்டார்’, ஜெயிலர் விழா...சூப்பரான ‘லியோ’ அப்டேட்... இன்றைய டாப் சினிமா செய்திகள்! entertainment headlines today july 29th tamil cinema news kollywood update Rajinikanth Jailer Vijay Dhanush Sanjay Dutt Entertainment Headlines July 29: விவாதப் பொருளான ‘சூப்பர் ஸ்டார்’, ஜெயிலர் விழா...சூப்பரான ‘லியோ’ அப்டேட்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/29/ca1d61a613c77cb1cce8ad6ca40bfc141690633006096574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் தனுஷின் டிவிட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்ட ப்ளு டிக்... ப்ளு டிக் பெறுவதற்கான விதிகள் என்ன?
நடிகர் தனுஷின் டிவிட்டர் கணக்கில் இருந்து இன்று ப்ளு டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் சிஇஓ-வாக எலன் மஸ்க் செயல்பட்டு வரும் நிலையில், நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நீல நிற குறியீடுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க
லியோ விஜய்க்கு ஆண்டனி தாஸ் யாரு? சஞ்சய் தத் பிறந்தநாளில் மிரட்டல் அப்டேட் தந்த படக்குழு!
லியோ படத்தில் இயக்குநர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கைக்கோர்த்துள்ள லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீசாகும் என பட பூஜை அன்றே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் படிக்க
கழுகை, காகத்தால் மிஞ்ச முடியாது... குட்டிக்கதை சொன்ன சூப்பர் ஸ்டார்...
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள், மற்றும் குட்டிக் கதை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. "நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார். மேலும் படிக்க
"குடிப்பழக்கம்.. எனக்கு நானே வெச்சுக்கிட்ட சூன்யம்” ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி சொன்ன விஷயம்..
எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் இடத்தை விட மேலே இருந்திருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
போய் கதையை சொல்லு; நல்லா இருக்கும்... நம்பிக்கை அளித்த விஜய்... ஜெயிலர் விழாவில் நெல்சன் நெகிழ்ச்சி!
”ரஜினிகாந்திடம் கதை சொல்ல சற்று பயமாக இருந்தபோது, எனக்கு நம்பிக்கை அளித்தது நடிகர் விஜய்,” என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ரஜினியிடன் கதையை எப்படி சொல்வது என்று தயக்கம் இருந்தபோது, நடிகர் விஜய் “அவரிடம் போய் கதை சொல்லு;எல்லாம் நல்லாதான் இருக்கும்” என்று தனக்கு நம்பிக்கை வார்த்தை சொன்னதாக நெல்சன் விஜய் குறித்து பேசியுள்ளார். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)