Entertainment Headlines July 20: கங்குவா அப்டேட் முதல்.. இணைய தொடர்களுக்கு மத்திய அரசு விருது வரை.. இன்றைய சினிமா செய்திகள் இதோ..!
Entertainment Headlines Today July 20th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
எ.ஸ்.ஜே சூர்யா என்றால் உங்கள் நினைவிற்கு வருவது இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவா அல்லது நடிகர் எஸ்.ஜே சூர்யாவா என்ற குழப்பம் வரும். எப்படியாக இருந்தாலும் இரண்டிலும் வெற்றிபெற்று மக்கள் மனதில் அவர் இடம்பிடித்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இன்று அவருக்கு 55 ஆவது பிறந்தநாள். சில அபூர்வமான தகவல்களை நாம் எஸ்.ஜே சூர்யாவைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நம்மைப்போல் மிக சாதாரண மனிதர் ஒருவர் தனது லட்சியத்திற்காக உறுதியான நின்று இன்று வெற்றிபெற்று நிற்கும் ஒரு நபரின் மேலும் படிக்க,
டோலிவுட் சினிமாவின் மிகவும் வசீகரமான நடிகராக விளங்குபவர் மகேஷ் பாபு. தனது 47 வயதிலும் அழகாகவும் ஃபிட்டாகவும் தனது தோற்றத்தை பராமரித்து வருகிறார். இந்நிலையில், தனது ஃபிட்னெஸ் ரகசியம் குறித்த ஸ்பெஷல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ஒன்றை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க,
சூர்யாவின் 42ஆவது படமான இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூரும் இப்படத்தில் இணைந்துள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. 13 கதாபாத்திரங்களில் சூர்யா இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் க்ளிம்ஸ் பற்றிய அப்டேட் மேலும் படிக்க,
பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் புராஜெக்ட் கே படத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர அபிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட உச்சக்கட்ட திரை நட்சத்திரங்கள் புராஜெக்ட் கே-வில் இணைந்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சனை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புராஜெக்ட் கே படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. மார்வெல் காமிக்ஸ் படங்களை போல் மேலும் படிக்க,
திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், திரைப்படங்கள், தொழில்நுட்ப கலைஞர் என பல பிரிவுகளின் கீழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக சிறந்த ஆவணப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அந்த வரிசையில் இணைந்துள்ளது இணைய தொடர்கள்.மேலும் படிக்க,
மாவீரன் திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மாவீரன் திரைப்படம் வித்தியாசமான கதைகளமாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த திரைக்கதை மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு இருக்கிறது. பல்லாயிர கணக்கான மக்கள் சென்னையின் மையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். காலம் காலமாக குடியிருந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படும்போது புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறபோது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது சித்தரிக்கும் மேலும் படிக்க,
ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்’ ஜூலை 17ஆம் தேதி வெளியாகினது. முன்னதாக கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த பாடலின் முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் ரஜினியின் பன்ச் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களை எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் மேலும் படிக்க,