Entertainment Headlines July 16: கண்கலங்கிய சிவகுமார்.. மகளை பாராட்டிய ஷங்கர்.. இன்றைய சினிமா செய்திகள்...!
Entertainment Headlines Today July 16th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
- யோகி பாபு - சிம்பு தேவன் கூட்டணியில் 'போட்'... வெளியானது டைட்டில் லுக் போஸ்டர்
சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். இப்படத்துக்கு 'போட்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு கடல் சார்ந்த கதை என்பது டைட்டில் வீடியோ மூலம் அறியப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பின் சிம்புதேவன் படம் இயக்க உள்ளது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
- அம்மாவான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை நக்ஷத்ரா ..
பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமான அவர், கடந்தாண்டு விஷ்வா சாம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நக்ஷத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், “கடந்த பல மாதங்களாக வயிற்றில் உதைக்கப்பட நிகழ்வை நேரடியாக பார்த்து விட்டோம்" என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- 'கல்வியில் சாதி பார்க்காதீங்க’ ..’எங்க அம்மா இல்லன்னா இன்னைக்கு நான் இல்ல’.. கண்கலங்கிய சிவகுமார்...
சென்னையில் இன்று (ஜூலை 16) சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி என அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், கல்வியில் சாதி பார்க்காதீர்கள் என கூறினார். அவரின் கருத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
- சொல்லி அடித்த மடோன் அஸ்வின்.. அப்பாவிடம் அப்ளாஸ் வாங்கிய அதிதி
மடோன் அஸ்வின் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாவீரன். இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மாவீரன் படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க
- ஒவ்வொரு படத்திற்கும் ஏற்படும் மன உளைச்சல்.. லவ் படம் குறித்து நடிகர் பரத்
நடிகர் பரத்தின் 50 ஆவது படமான லவ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தனது 50-வது படம் குறித்தான அனுபவத்தை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார் நடிகர் பரத். அப்போது,ஒரு படத்தை எடுத்து முடிப்பதுடன் அதனை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஏற்படும் மன உளைச்சல் என்பது மிக அதிகம் என அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க