மேலும் அறிய

Entertainment Headlines Aug 27: அஜித்தின் சைக்கிள் பயணம்.. நயன் குழந்தைகளின் ஓணம் ஃபோட்டோ.. சந்திரமுகி 2 கதை.. டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Aug 27: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

Gun மேனுடன் ஷூட்டிங் வந்த கங்கனா... பயந்துபோன ராகவா லாரன்ஸ்... சந்திரமுகி 2 ஷூட்டிங்ல நடந்தது இதுதான்!

நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்காக லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், கங்கனா ரனாவத் ஹீரோயினாக நடித்துள்ளார். வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க

விடாமுயற்சியின் பலன்.. காமெடி நடிகர் to ஹீரோ.. சூரியின் பிறந்தநாள் இன்று..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து இன்று ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்றுள்ள நடிகர் சூரி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையில் நம்மை மகிழ்விக்கும் கலைஞர்கள் எல்லோரும் பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. அப்படி வந்தாலும் தங்கள் முயற்சியின் மூலமாகவே மக்களின் மனதில் இடம் பிடிப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

பைக் ரேஸ் போதும், இனி சைக்கிள் ரைட் தான்.. குழந்தைகள் படை சூழ அஜித்.. இணையத்தைக் கலக்கும் ஃபோட்டோ!

நடிகர் அஜித் குமார் சைக்கிளில் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. துணிவு பட வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62ஆவது படமாக உருவாக உள்ள விடாமுயற்சி படத்தினை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அகித் குமார் ரசிகர் பட்டாளமும் ஒருபக்கம் காத்திருக்க, நடிகர் அஜித் மற்றொரு பக்கம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி உலக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மேலும் படிக்க

ப்ளடி ஸ்வீட்...! லியோ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ஆண்டவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என  தகவல் வெளியாகியுள்ளது.  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து பிரமாண்டமாக லியோவை இயக்கியுள்ளார். மேலும் படிக்க

‘சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்’ .. சுவாரஸ்யமான தகவல்களை சொன்ன இயக்குநர் பி.வாசு..!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரமுகி 2 படத்தின் கதை என்ன என்பதை இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  பி.வாசு இயக்கிய இந்த படம் தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் படிக்க

சந்தோஷக் கண்ணீரே... 13ஆம் ஆண்டு திருமண நாள்... மனைவிக்கு க்யூட் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி இன்று தங்கள் 13ஆவது திருமண நாளைக் கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு காலை முதலே பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். தொலைக்காட்சியில் தன் பயணத்தைத் தொடங்கி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக நுழைந்து தன் வளர்ச்சியால் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் படிக்க

இது டபுள் ஓணம்... உயிர், உலக் உடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கொண்டாட்டம்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் இரட்டைக்குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி,  அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகினர். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget