மேலும் அறிய

RK Nagar Premiere: கலர்ஸ் தமிழில் ப்ரீமியர் ஆகும் ஆர்.கே.நகர்.. பெருமிதம் கொள்ளும் வைபவ்..!

நடிகர் வைபவ் நடித்திருக்கும் ஆர் கே நகர் திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இன்று ப்ரீமியர் செய்ய இருக்கிறது. 

நடிகர் வைபவ் நடித்திருக்கும் ஆர் கே நகர் திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இன்று ப்ரீமியர் செய்ய இருக்கிறது. 

குற்றங்கள் தினசரி நிகழ்வுகளாக நடைபெறும் நிழல் உலகத்தை பின்புலமாகக் கொண்டு ஆர் கே நகர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் சரவணராஜன் இயக்கத்தில் கடந்த 2019 – ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை சனா அல்தாஃப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். நடிகை அஞ்சனா கீர்த்தி, நடிகர் சம்பத் ராஜ், நடிகர் இனிகோ பிரபாகரன் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தனர். 

RK Nagar Premiere: கலர்ஸ் தமிழில் ப்ரீமியர் ஆகும் ஆர்.கே.நகர்.. பெருமிதம் கொள்ளும் வைபவ்..!

கதையின் கரு 

பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாக ஆகின்றனர்.  ஆனால், ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றனர் என்று நம்புகின்ற சங்கருக்கு (வைபவ்) பணக்காரர்கள் மீது மதிப்போ, மரியாதையோ இல்லை.  எனினும், சில ரௌடிகளை துரத்திக்கொண்டு சங்கர் ஓடுவதை ரஞ்சனி (நடிகை சனா அல்டாஃப்) பார்க்கும்போது அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவன் மீது விழுகிறது.  

RK Nagar Premiere: கலர்ஸ் தமிழில் ப்ரீமியர் ஆகும் ஆர்.கே.நகர்.. பெருமிதம் கொள்ளும் வைபவ்..!
ரௌடிகளையும், குண்டர்களையும் வெறுக்கின்ற தனது அதே கண்ணோட்டமே சங்கரிடமும் இருக்கிறது என்று நினைக்கின்ற ரஞ்சனிக்கு சங்கர் மீது மதிப்பு வருகிறது. அவர்களது உறவு வளர ஆரம்பிக்க, விஸ்வநாதன் என்ற லோட்டை (சம்பத் ராஜ்) மற்றும் மனோஜ் என்ற மன்னு (இனிகோ பிரபாகரன்) என்ற இரு எதிரிகள் மோதலில் ஈடுபடுகின்றனர்.  இவர்களது மோதலின் காரணமாக மிகப்பிரபலமான ஒரு நபர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை குற்றச்சாட்டு சங்கர் மீது விழுகிறது. குற்றமிழைக்காத நபர் என்று தன்னை சங்கர் எப்படி நிரூபிக்க போராடுகிறார் என்பதே மீதி கதை..

வைபவ் பேட்டி

இத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் வைபவ் இதுபற்றி கூறியதாவது: “சிறப்பான கதைக்களத்தையும், அதிரடி திருப்பங்களையும் கொண்ட இத்திரைப்படம், தமிழ்நாட்டின் பிரபல சேனலான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. அதிரடி சண்டை நிகழ்ச்சிகளுக்கு பொருந்துகின்றவாறு நகைச்சுவை காட்சிகளையும் சிறப்பாக ஆக்குவதற்கு இதில் நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.  

ஒரே திரைப்படத்தில் த்ரில்லர், காமெடி மற்றும் ரொமான்ஸ் என்ற மூன்று பிரிவுகளில் நடிக்கும் அரிதான வாய்ப்பு இத்திரைப்படத்தில் எனக்கு இக்கதாபாத்திரத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. பார்வையாளர்களும் இத்திரைப்படத்தை ரசித்து அனுபவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இது இருக்கும்.” என்றார். இந்தப்படம் இன்று மதியம் 2.00 மணிக்கு  ஒளிப்பரப்பபடுகிறது. 

இயக்குநர் பேட்டி 

இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. சரவண ராஜன் இதுகுறித்து பேசுகையில், “கலர்ஸ் தமிழ் போன்ற மிகப்பிரபலமான சேனலில் எனது திரைப்படம் ஒளிபரப்பப்படுவது உள்ளபடியே எனக்கு பெருமகிழ்ச்சி.  இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவதோடு, அவர்களுக்குப் பிடித்த திரைக்காவியமாக இருக்குமென்று நான் நம்புகிறேன்.” என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget