English Vinglish: இங்கிலீஷ் விங்கிலீஷ்..10 வருடங்கள்.. கதறி அழுத போனி கபூர்...
'English Vinglish' திரைப்படத்தின் பத்து ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற விழாவில் மறைந்த மனைவி ஸ்ரீதேவியை நினைத்து மனம் உருகி போனி கபூர் அழுதார்.
English Vinglish: இங்கிலீஷ் விங்கிலிஷ் இந்திய திரைப்படம் பல மொழிகளில் மொழி மாற்றப்பட்டு வெளியானது. இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரித்திருந்தார். இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு அதே நாளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் 2012 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு 5 நிமிட நின்று கைதட்டலைப் பெற்றது. இத்திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு திரை பிரபலங்கள் இடையே பெருமைக்குரிய ஒன்றாக பேசப்பட்டது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றில் பாராட்டுக்களை இத்திரைப்படம் குவித்தது. ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூபாய் 102 கோடியை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குநர் விருதுகளை கௌரி ஷிண்டே இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் வென்றார். சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் பிரிவில் அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் பட்டியலில் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் உலகளாவிய பாராட்டைப் பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் 'என்று புகழப் பெற்றார்.
இந்நிலையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது, அதன் நினைவாக தயாரிப்பாளர்கள் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்வில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் கலந்து கொண்டனர். திரைப்படம் மற்றும் படத்திற்கான அவரது பங்களிப்பு பற்றி அவர்கள் பேசினார். மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்த மறைந்த தனது மனைவியை நினைத்து போனி கபூர் கண்ணீர் மல்க அழுதார்.
சில நாட்களுக்கு முன்பு, போனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியின் பெருமை குறித்து வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, ”ஸ்ரீதேவி 15 வருட இடைவெளிக்குப் பிறகு இத்திரைப்படத்தில் நடித்தது எந்த காலத்திலும் பேசக்கூடிய ஒன்று. இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு அனைவரின் இதயங்களையும் தொட்டது. இந்த படம் எந்த காலத்திலும் சிறப்புடம் மக்கள் மத்தியில் பெருமையாக பேசக்கூடியது” என தெரிவித்தார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )