மேலும் அறிய
Advertisement
Elon Musk Biopic Movie: தோல்வி முதல் வெற்றி வரை... சர்ச்சை நாயகனான எலான் மஸ்க்... பயோபிக் படத்தில் நடிக்க போவது யார் தெரியுமா..?
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
Elon Musk Biopic Movie: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர், டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் என பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க் எப்பொழுதும் உலகளவில் டிரெண்டாகக் கூடிய பிரபலமாக வலம் வருபவர். அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் புளூட் டிக், டிவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
தென்னாப்பிக்காவில் சாதாரன ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் உலகளவில் அனைவருக்கும் பரீட்சியமான மிகப்பெரிய பணக்காரரான தன்னை உயர்த்தின் கொண்டார். ஆரம்பத்தில் இருந்து இதுவரை ஒவ்வொரு முறையும் பல தோல்விகளை சந்தித்த எலான் மஸ்க், விண்ணை தாண்டு ஆய்வு செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார். பெரும் முதலாளிகளுக்கு முதலாளியாக சிகரம் தொட்டுள்ளார். எவ்வளவு தான் உயரத்தில் சென்றாலும் எலான் மஸ்கின் சில செயல்கள் அவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.
தோல்வி, வெற்றி, சர்ச்சை, புகழ் என மொத்தமாக தன்னை பேச வைத்துள்ள எலான் மஸ்கின் கதையை பிரபல அமெக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தத்தில் எலான் மஸ்கின் சிறுவயது வலிகள் முதல் தற்போதுள்ள வெற்றி வரை முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புத்தகத்தை திரைப்படமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Cool Video! Elon Musk Life @elonmusk 🔥🚀♥️ pic.twitter.com/pgDKOIG9xG
— Irina Antony 🤎🪐✨ (@TwinkleX4281) November 16, 2023
எலான் மஸ்க் புத்தகத்தை வைத்து அவரது வாழக்கை திரைப்படத்தை பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் டேரன் அரோனோபிஸ்கி இயக்க உள்ளார். இதை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டேரன் அரோனோபிஸ்கி தி வேல், மதர், பை(Pi) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கு பேசப்படும் இயக்குநராக உள்ளார். தொழிலிலும், சமூக வலைதளங்களிலும் மட்டும் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்த எலான் மஸ்க் தற்போது திரையிலும் ஹீரோவாக வர உள்ளார். எலான் மஸ்கின் வாழ்க்கை படத்தில் எலான் மஸ்காக ’கோஸ்ட் ரைடர்’ படத்தில் நடித்த நிக்கோலஸ் கேஜ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், தனது பயோபிக் படத்தில் எலான் மஸ்கே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அயர்ன் மேன் 2 பாகத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனதாக சிறிய ரோலில் எலான் மஸ்க் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: Rajnikanth: “நூறு சதவிகிதம் கப்பு நமதே” - சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion