மேலும் அறிய

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு..ரிலீஸ் எப்போ ?

துல்கர் சல்மான் நடித்துள்ள ஐ ஆம் கேம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் ( Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். 

படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

தொழில்நுட்ப குழு விவரங்கள்:

லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி
மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX   : தௌஃபீக் (எக்வொயிட்)   (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா
சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget