இது உண்மையா இல்ல உருட்டா? ஐசரி கணேஷ் மகளுக்கு சீதனமாக 1000 சவரன் தங்கள் முதல் என்னென்ன கொடுத்துள்ளார் தெரியமா?
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது மகள் பிரீத்தா திருமணத்திற்கு சீதனமாக 1000 பவுன் தங்க நகைகளை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் ஒன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணம். இவரது மூத்த மகள் பிரீத்தா மற்றும் லஷ்வின் குமார் திருமணம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், பாக்யராஜ், பிரபு, பிரசாந்த், கௌதம் மேனன், வெற்றிமாறன், சீமான், வைரமுத்து, ரவி மோகன், அதிதி, ஆதிக் ரவிச்சந்திரன், விக்ரம் பிரபு, சூர்யா என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கணேஷ். தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மூலமாக கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். இவருடைய ஒரே மகள் தான் பிரீத்தா கே கணேஷ். இவருக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை பிரீத்தாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்று 30 கோடி செலவு செய்து தனியாக செட் போட்டு திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி இருந்தார். சென்னை ஈசிஆரிலுள்ள பழைய டிரைவின் தியேட்டரான பிரார்த்தனா தியேட்டரில் தான் இந்த செட் போடப்பட்டிருக்கிறது. இங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள ஆர்கே மஹாலில் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் தான் பிரீத்தாவின் திருமணத்திற்கு இவர் சீதனமாக கொடுத்துள்ள தங்க நகை மற்றும் ரொக்க பணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 1000 பவுன் தங்கம், மற்றும் வைர நகைகளை சீதனமாக மகளுக்கு கொடுத்துள்ளார். இதை தவிர ரூ.5000 கோடி வரை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுகிறது. இதை கேள்விப்படும் நெட்டிசன்கள் இது உண்மையா அல்லது உருட்டா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த திருமணத்திற்கு பந்தல் காலிலிருந்து பந்தி வைப்பது வரைக்கும் என்று கிட்டத்தட்ட ரூ.700 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திருமணத்தில் 200 வகையான உணவுகள் பரிமாறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் இல்லை என்றாலும், வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல். அதோடு வரதட்சணை குறித்து செய்தியை மட்டுமே இங்கு பதிவிட விரும்புகிறோமே தவிர அதனை ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.





















