'களவாணி' படத்தில் கேஜிஎஃப் யாஷ் நடிச்சிருக்காரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே... வைரலாகும் போட்டோ!
கேஜிஎஃப் படம் மூலமாக மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் யாஷ். இவர் களவாணி படத்தில் நடித்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

சினிமாவைப் பொறுத்த வரையில், ஒரு மொழியில் ஹிட் கொடுக்கும் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழில் ஹிட் கொடுக்கும் படங்கள் மற்ற மொழிகளிலும், மற்ற மொழிகளில் ஹிட் கொடுக்கும் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.
தமிழில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'களவாணி'. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். மேலும் சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2010-ஆம் ஆண்டு காதல் மற்றும் காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திம் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படம் கன்னடத்தில் 'கிராதகா' என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த நடிகை ஓவியாவே நடித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கிராதகா தமிழில் வெளியான களவாணி படத்தைப் போன்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தத்து . இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் யாஷ் தான் கன்னடத்தில்உருவான 'களவாணி' படத்தில் நடித்தாரா என ஆச்சயப்பட்டு வருகிறார்கள்.

யாஷ் கன்னட திரையுலகில் மட்டுமே பிரபலமான ஹீரோவாக இருந்த நிலையில், இவரை உலக அளவில் பிரபலமாகியது, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கித்தில் ரிலீல் ஆன கேஜிஎஃப் திரைப்படம் தான். 2018 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை விட, கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடி வரையில் வசூல் செய்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் குவித்த நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது. தற்போது ரசிகர்கள் பலரும் இவரை ராக்கி பாய் என்றே அழைத்து வருகிறார்கள். அப்படியொரு அடையாளத்தை கொடுத்த படம் தான் கேஜிஎஃப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.





















