மேலும் அறிய

விரைவில் துவங்கவுள்ளது "வாடிவாசல்" திரைப்படம்... லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு...

Vaadivasal: "வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vaadivasal: 200 கோடி பட்ஜெட்... சூர்யா - வெற்றிமாறனின் புதிய கூட்டணி...விரைவில் ஷூட்டிங் ஆரம்பம் 

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "வாடிவாசல்" திரைப்படம் பற்றின லேட்டஸ்ட் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் துவங்கவுள்ளது

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிக்கும் இப்படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஜிவி பிரகாஷ். இப்படத்தின் டெஸ்ட் வீடியோ ஷூட்டிங் காட்சிகளில் இருந்து ஒரு சீன் மட்டும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து "வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் நீண்ட நாட்களாக துவங்காமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. 

 

 

விரைவில் வாடிவாசலுக்கு தயாராகிறார் சூர்யா:

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் "வணங்கான்" படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் "சூர்யா 42 " என்ற படத்தின் ஷெட்யூலை முடித்த பிறகு "வாடிவாசல்" திரைப்படத்தில் பிஸியாகி விடுவார் சூர்யா என கூறப்படுகிறது. இதுவரையில் சூர்யா நடித்த படங்களிலேயே அதிகமான சுமார் 200 கோடி ரூபாய் என அதிக  பொருட்செலவில் தயாராக இருக்கும் திரைப்படம் "வாடிவாசல்". 

 

 

அடுத்தடுத்த ப்ராஜெக்ட் குறித்த விவரம்:

மறுபுறம் இயக்குனர் வெற்றிமாறன் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகிவரும் "விடுதலை" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்க உள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் "அசுரன்" திரைப்படமும் 'வெக்கை' எனும் ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் சூர்யா 'சூரரைப் போற்று' இயக்குனர் சுதா கொங்கரா, 'ஜெய் பீம்' இயக்குனர் டி.ஜே.ஞானவேல் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோருடன் இணைந்து பணிபுரிய உள்ளார் நடிகர் சூர்யா. 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Embed widget