வெற்றிமாறன் சொன்னது நடக்குமா?.. சிம்புவா, சூர்யாவா.. சஸ்பென்ஸ் வைக்கும் தயாரிப்பாளர்!
இயக்குநர் வெற்றிமாறன் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியானது.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் இனிமேல் எனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி புதிய படங்கள் எதையும் தயாரிக்க போவதில்லை என அறிவித்தார். இவரது அறிவிப்பு தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான மனுசி திரைப்படம் தான் காரணம் என கூறப்படுகிறது. இப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை குழு அறிவித்ததால் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.
வாடிவாசல் அப்டேட்?
அதைத்தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்தும், வாடிவாசல் குறித்த அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியால் ரசிகர்கள் செம குஷியானார்கள். வடசென்னை 2 நிச்சயம் தொடங்கப்படும் என்பது குறித்தும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். பேட் கேர்ள் பட விழாவில் அடுத்தடுத்து அப்டேட்களை அறிவித்ததால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே வாடிவாசல் படப்பிடிப்பு தள்ளிப்போவதற்கான காரணத்தையும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். ஒரு வேளை சிம்பு படம் குறித்த அறிவிப்பு தான் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணு கொடுத்த அப்டேட்?
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சமூகவலைதளத்தில் ரசிகர்களுக்கு ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். ரசிகர்கள் என்ன படம் சார், வாடிவாசலா, சிம்பு 49 படமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். பலரும் கமெண்டில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதில், விரைவில் முக்கி அறிவிப்பை வெளியிடுவதற்கான குறியீடுடன் பதிவிட்டுள்ளார். ஒரு வேளை வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி கலைப்புலி எஸ்.தாணு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















