HBD Vetrimaaran: நிகழ்கால திரையுலகின் பிதாமகன்.. இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் இன்று..!
பல்சர் பைக்கும், அதனோட பின்னப்பட்ட கதையும் யார் அந்த இயக்குநர் என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழ அங்கே வெற்றிமாறனின் வெற்றிப் பாதை தொடங்கியிருந்தது.
தற்கால தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
View this post on Instagram
2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் வெளியாகியிருந்தது. அதுவும் அப்போது அவர் வளரும் நடிகர் தான். அதே நாளில் விஜய்யின் அழகிய தமிழ்மகன்,சூர்யாவின் வேல் ஆகிய படங்கள் வெளியான நிலையில் ரசிகர்களின், குறிப்பாக இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு பொல்லாதவன் படத்துக்கே இருந்தது. பல்சர் பைக்கும், அதனோட பின்னப்பட்ட கதையும் யார் அந்த இயக்குநர் என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழ அங்கே வெற்றிமாறனின் வெற்றிப் பாதை தொடங்கியிருந்தது.
தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிமாறன் 2வது படம் எடுக்க 3 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஆடுகளம் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் முதல் 20 நாட்கள் ஷூட்டிங் முடிக்கப்பட்டிருந்தது. படம் எப்படி வந்திருக்கிறது என பார்க்கலாம் என்று 45 நிமிட ஃபுட்டேஜ் ரஃப் கட் செய்யப்பட்டது. அதனைப் பார்த்த ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. ஆம் படத்தின் காட்சிகள் ஒன்றிபோகாமல் இருந்ததாகவும், அதனால் தன் வாழ்க்கையே கேள்விக்குறி ஆனதாக நினைத்தேன் என்றும் ஒரு பேட்டியில் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். ஆனால் காலம் நம் கையில் இருந்தால் எதுவும் சாத்தியம் தான் என்பது போல ஆடுகளம் வெளியாகி ஆறு தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது.
வெற்றிமாறன் 🐐🙇🏾
— Premkumar selvaraja (@DhanushianPrem) September 4, 2022
(your movie's are like an expensive form of therapy for me)
Happiest, 47❤️#VetriMaaran pic.twitter.com/AF3hH5SSfi
Wishing Filmmaker Vetrimaaran sir, a very happy birthday 💐🎊 All the best for #Vaadivaasal and #Viduthalai 💐💐
— Studio Green (@StudioGreen2) September 3, 2022
wishes from @StudioGreen2 @kegvraja #HappyBirthdayVetrimaaran#HBDVetrimaaran#Vetrimaaran #StudioGreen #KEGnanavelRaja pic.twitter.com/0o2hHMVkiH
Happy Birthday #VetriMaaran
— ⚡Robin D Bad Guy 😷 🗡️ 🪓 (@robinthebadguy) September 3, 2022
Sir 💐🔥 Inspiration Of Every Youngsters Soon We Are Waiting For Thalapathy Vijay Sir 💐🔥 Combo 💐🎁🎂🎂 #Thalapathy67𓃵 #ThalapathyVijay𓃵 @actorvijay #Varisu #HBDVetrimaaran pic.twitter.com/wlLUKq8HqG