மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Ameer: "அமீர் படத்துக்கு தடை விதிக்கனும்" கொந்தளித்த இயக்குனர் வராகி - காரணம் என்ன?

அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கொச்சைப் படுத்தும் விதாமாக இருப்பதாக இயக்குநர் வராகி கண்டனம் தெரிவித்துள்ளார்

உயிர் தமிழுக்கு

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள “உயிர் தமிழுக்கு” (Uyir Thamizhukku) படத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்த உயிர் தமிழுக்கு படம் கடந்த மே 10 தியேட்டர்களில் வெளியாகியது.

அரசியல் பகடியாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமகால அரசியல் சூழலையும் சமகால அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை மறைமுகமாக பகடி செய்யும் வகையில் இந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியான நிலையில் அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை எதிர்த்து பத்திரிகையாளர் சந்திப்பு  நடத்தியுள்ளார் இயக்குனர் வராகி. 

எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்துறாங்க

அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் எம்.ஜி.ஆரை கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாக இயக்குநர் வராகி தெரிவித்துள்ளார் ‘ ஜிகர்தண்டா , விடுதலை , வடசென்னை  இந்த மாதிரியான படங்களில் தொடர்ந்து எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை பேசுவதாக வராகி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படமும் எம்.ஜி ஆரை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார் . இன்று ஸ்டானினையோ , உதயநிதி ஸ்டாலினையோ , அல்லது மறைந்த கலைஞர் கருணாநிதியை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?

கலைஞர் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை வைத்து ஆயிரம் சீன் சொல்வேன். ஆனால் படம் தியேட்டரில் வந்தால் அடித்து உடைக்கமாட்டார்களா? எம்.ஜி ஆரை கடவுளாக இன்றும் தமிழ் நாட்டு மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அமீர் ஒரு நல்ல கலைஞர். ஆனால் இந்த ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் அமீரின் வன்மமான ஒரு பக்கம் வெளியே தெரிகிறது.

அமீரை இயக்கும் தி.மு.க.:

அமீரை திமுக பின்னிருந்து இயக்குதோ என்று என்னால் சொல்ல முடியும் .அதற்கு ஏற்றபடி படத்தில் ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகன் . ஒரு ரசிகனாக நான் சொல்கிறேன் இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆரை அசிங்கப்படுத்தும் செயல் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடித்த அண்ணாச்சி திமுக சார்புள்ளவர்.

இந்த தேர்தலில் தான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன் என்று அமீர் வெளிப்படையாகவே சொன்னார். படத்தை இயக்கிய ஆதம்பாவா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் இப்படியான நிலையில் அவரை பின்னிருந்து திமுக இயக்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஆதம்பாவாவிடம் நான் இது ரொம்ப தவறான விஷயம் என்று ஃபோன் பண்ணி சொன்னேன். இப்படி தொடர்ச்சியாக தமிழ் திரையுலகம் திமுகவுக்கு ஆதராவாக செயல் பட்டு வருகிறதா? இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான அமீர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிர் தமிழுக்கு படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இயக்குனர் வராகி சிவா மனசுல புஷ்பா என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!
Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!
Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Lok sabha election | 400 இடங்களை வெல்லுமா பாஜக? ஆட்சியமைக்கப் போவது யார்? ABP - C VOTER EXIT POLLABP - C Voter Exit Poll 2024 Results | தென்னிந்தியாவை தட்டி தூக்கிய மோடி! EXIT POLL முடிவில் அதிர்ச்சி!Narikuravar Untouchability | ”நரிக்குறவர்களுக்கு TICKET கொடு”அலற விட்ட வட்டாட்சியர் பதறிய தியேட்டர்VJ Siddhu Issue | ‘’முடிஞ்சா கை வைங்க’’மாட்டிவிட்ட TTF FANS..சிக்கலில் VJ SIDDHU?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!
Indian 2 Audio Launch: இன்றைய சூழலில் வரும் இந்தியன் தாத்தா.. கமல் காட்சிகளில் அனல் பறக்கும்.. ஷங்கர் தந்த அப்டேட்!
Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்
Dinesh Karthik Retirement: என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி - ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்
Watch Video: ரோகித்தை பார்த்ததும் மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்! ஹாலிவுட் பாணியில் பிடித்த அமெரிக்க போலீஸ்
Watch Video: ரோகித்தை பார்த்ததும் மைதானத்தில் அத்துமீறிய ரசிகர்! ஹாலிவுட் பாணியில் பிடித்த அமெரிக்க போலீஸ்
Bobby Simha: பாய்ஸ் படத்தில் நிறைவேறாத ஆசை இப்போ நிறைவேறி இருக்கு.. இந்தியன் 2 விழாவில் பாபி சிம்ஹா உருக்கம்!
Bobby Simha: பாய்ஸ் படத்தில் நிறைவேறாத ஆசை இப்போ நிறைவேறி இருக்கு.. இந்தியன் 2 விழாவில் பாபி சிம்ஹா உருக்கம்!
Rasipalan: துலாமுக்கு  உதவி...விருச்சிகத்துக்கு செலவு....இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: துலாமுக்கு உதவி...விருச்சிகத்துக்கு செலவு....இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
உடல்நலக் குறைவால் இறந்த டேங்க் ஆபரேட்டர் மனைவிக்கு வேலை வேண்டும் - ஒன்று சேர்ந்த பணியாளர்கள்
உடல்நலக் குறைவால் இறந்த டேங்க் ஆபரேட்டர் மனைவிக்கு வேலை வேண்டும் - ஒன்று சேர்ந்த பணியாளர்கள்
Embed widget