Sudha Kongara: ரஜினியுடன் ஒரு படம்.. சுதா கொங்காராவின் அடுத்த அடி.. முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி!
ஒரு லவ் ஸ்டோரி படம் எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாகும். பெரிய ஹீரோவை வைத்து அப்படத்தை எடுக்க வேண்டும் என இயக்குநர் சுதா கொங்காரா கூறியுள்ளார்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை என தெரிவித்துள்ள இயக்குநர் சுதா கொங்காரா, அவரை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கொங்காரா துரோகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் அவர் இயக்கிய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்களில் பெண் இயக்குநராக அவரை முன்னிலைப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தது. தற்போது சுதா, ‘பராசக்தி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரவி மோகன், சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் 2026, ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
#பராசக்தி - ஜனவரி 🔟 முதல் 💥#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth @dop007 @editorsuriya @supremesundar… pic.twitter.com/cxVlmwRUCJ
— DawnPictures (@DawnPicturesOff) December 22, 2025
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்காராவிடம், “பெண்களின் பார்வையில் இருந்து ஒரு பெண் இயக்குநரான உங்களிடம் இருந்து ஒரு காதல் காவியம் நிறைந்த படம் ஒன்றை எதிர்பார்க்கிறோம்” என சொல்லப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியான ஒரு கதை இருக்கிறது. அந்த கதையை தான் நான் முதலில் சிவகார்த்திகேயனிடம் எடுத்து சென்றேன். என்னுடைய நெருங்கிய நண்பரான அஞ்சலி மேனன் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு காதல் கதை. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஒரு நாவல் படித்தேன், மிகவும் பிடித்திருந்தது.
அது முழுக்க காதல் கதை தான். அப்படியான ஒரு லவ் ஸ்டோரி படம் எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாகும். பெரிய ஹீரோவை வைத்து அப்படத்தை எடுக்க வேண்டும். அவருடைய மிகப்பெரிய ரசிகை நான். அவரை வைத்து நான் அந்த காதல் கதையை எடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். அவர் வேறு யாருமல்ல ரஜினிகாந்த் தான்.
அவருடன் நான் முதல் மரியாதை ஸ்டைலில் ஒரு படம் எடுக்க வேண்டும். அந்த படத்துக்காக அடிப்படை கதை என்னிடம் இருக்கிறது. அதை முழுவதுமாக உருவாக்க வேண்டும். நான் காதல் கதை உள்ளிட்ட எல்லா விதமான படங்களையும் எடுக்க விரும்புகிறேன். அதேசமயம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நினைக்கிறேன். போதும் என தோன்றி விட்டது. நான் சோர்வடைந்து விட்டேன் என சொல்லலாம்.
ஒரு 20,25 வருடத்திற்கு முன்னால் நான் பெரிய ஹீரோ ஒருவரிடம் கதை சொல்ல சென்றேன். ஆனால் அப்போது பெண்களுக்கு எல்லாம் படம் எடுக்க வராது என சொன்னார்கள் எனவும் சுதா கொங்காரா கூறியுள்ளார்.




















