மேலும் அறிய

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக நடிக்கும் படத்தில் முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்

கோல்வுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. எச் வினோத் , ஜேசன் சஞ்சய் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

தமிழ் சினிமாவில் பல்வேறு மாபெரும் வசூல் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். கடந்த இரு ஆண்டுகளில் இவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்தபடியாக வரலாற்று நாவலான வேள்பாரி நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக்க உருவாக்க இருக்கிறார். அதற்கு முன்பாக ஒரு சின்ன நடிகர்களை வைத்து ஷங்கர் விறுவிறுப்பான ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாயகனாக அறிமுகமாகும் ஷங்கர் மகன் அர்ஜித் 

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.  . இவர் அமெரிக்காவில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் குறித்துப் பயின்றதோடு, 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் (NSD) முறையான நடிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். இப்படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' (Passion Studios) தயாரிக்கிறது; 'குட் ஷோ புரொடக்ஷன்ஸ்' (Good Show Productions) நிறுவனம் இதனை 'ஃபர்ஸ்ட்-காப்பி' (first-copy) அடிப்படையில் தயாரிக்கிறது. இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் முன்னதாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'சிங்கப்பாதை' என்ற கவர்சியல் திரைப்படத்தை இயக்கவிருந்து பின் அப்படம் கைவிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன்  தொடங்குகியது. படக்குழுவினர் விரைவாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்; அதன் பிறகு, திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பொருத்தமான தேதி இறுதி செய்யப்படும்.

சிறப்பு விருந்தினராக வந்த ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜயின் மகன்  ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஷங்கர் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் ஆகியோர் இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 31 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
Embed widget