மேலும் அறிய

Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு

Tata Sierra EV Vs Rivals: டாடா சியாரா மின்சார காரை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பீடு செய்து முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Tata Sierra EV Vs Rivals: டாடா சியாரா மின்சார காரின் முழு விவரங்களும் கீழே விளப்பட்டுள்ளன.

டாடா சியாரா EV Vs போட்டியாளர்கள்:

டாடா சியாராவின் இன்ஜின் எடிஷன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் மின்சார எடிஷன் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகவும் போட்டித்தன்மை மிக்க எஸ்யுவி செக்மெண்டில் 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது மஹிந்த்ராவின் BE 6, ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மாருதி சுசூகி எ விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இந்த வாகனங்களானது டிசைன், அம்சங்கள், செயல்திறன், விலை, பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் என பயனர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. அவற்றை டாடா சியாரா மின்சார எடிஷன் எப்படி எதிர்கொள்கிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சியாரா EV Vs போட்டியாளர்கள் - விலை ஒப்பீடு

சியாரா மின்சார எடிஷனின் விலையானது 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 25 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. இதன் மூலம் க்ரேட்டா எலெக்ட்ரிக், இ விட்டாரா, எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றை விட மேலேயும், மஹிந்த்ராவின் BE 6 டாப் வேரியண்டை காட்டிலும் கீழும் விலை வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கார் மாடல்கள் விலை வரம்பு (எக்ஸ் - ஷோரூம்)
டாடா சியாரா ரூ.18.79 லட்சம் - ரூ.25.99 லட்சம்
மஹிந்த்ராவின் BE 6 ரூ.18.90 லட்சம் - ரூ.28.49 லட்சம்
ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் ரூ.18.03  லட்சம் - ரூ.24.55 லட்சம்
மாருதி சுசூகி இ விட்டாரா ரூ.15.99 லட்சம் - ரூ.19.99 லட்சம்
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா டாப் வேரியண்டின் விலை ரூ.23.80 லட்சம்
MG ZS EV ரூ.17.99 லட்சம் - ரூ.20.75 லட்சம்
வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ரூ.17.29 லட்சம் - ரூ.19.19 லட்சம்

எபெல்லாவின் மற்ற வேரியண்ட்களின் விலையை டொடோட்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சியாரா EV Vs போட்டியாளர்கள் - பேட்டரி பேக் ஒப்பீடு

சியாரா மின்சார எடிஷனின் 63KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் நேரடி போட்டியாளர்களில் மஹிந்த்ராவின் BE 6 மட்டுமே பெரிய 79KWh என்ற பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. 

கார் மாடல்கள் பேட்டரி பேக் ஆப்ஷன்கள்
டாடா சியாரா 63KWh, 75KWh
மஹிந்த்ராவின் BE 6 59KWh, 79KWh
ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் 42KWh, 51.4KWh
மாருதி சுசூகி இ விட்டாரா 49KWh, 61KWh
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா 49KWh, 61KWh
MG ZS EV 50.3KWh
வின்ஃபாஸ்ட் விஎஃப்6 59.6KWh

இதையும் படியுங்கள்: Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்

சியாரா EV Vs போட்டியாளர்கள் - ரேஞ்ச் விவரங்கள்

சியாராவின் மின்சார எடிஷனானது தனது சிறிய பேட்டரி பேக்கில் 565 கிலோ மீட்டர் தூரமும், பெரிய பேட்டரி பேக்கில் அதிகபட்சமாக 665 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்த்ராவின் BE 6 683 கிலோ மீட்டர் ரேஞ்சில் முதலிடத்தை பிடித்தாலும், க்ரேட்டா எலெக்ட்ரிக், இ விட்டாரா, எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றை காட்டிலும் சியாரா முன்னிலை பெறுகிறது.

கார் மாடல்கள் ரேஞ்ச் விவரங்கள்
டாடா சியாரா 565 KM (63KWh), 665 KM (75KWh)
மஹிந்த்ராவின் BE 6 557 KM (59KWh), 683 KM (79KWh)
ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் 420 KM (42KWh),510 KM (51.4KWh)
மாருதி சுசூகி இ விட்டாரா 440 KM (49KWh), 543 KM ( 61KWh)
டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா 440 KM (49KWh), 543 KM (61KWh)
MG ZS EV 461 KM (50.3KWh)
வின்ஃபாஸ்ட் விஎஃப்6 463 KM (59.6KWh)

இந்திய பயணிகள் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவில், டாடா சியரா EV போட்டித்தன்மை வாய்ந்த விலை, இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் மற்றும் 665 கி.மீ. வரை செல்லும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த இடத்தை பெறுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த காரானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
ரூ.10 லட்சத்திற்குள் டர்போ பெட்ரோல் கார்கள்: வேகத்தை விரும்பும் உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?

Embed widget