Selvaraghavan : தமிழ் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்..இயக்குநர் செல்வராகவன் வைரல் வீடியோ
உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் மக்கள் தங்கள் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள் ஆனால் நாம் ஏன் தமிழில் பேசுவதை அவமானமாக பார்க்கிறோம் என தனது வீடியோவில் செல்வராகவன் பேசியுள்ளார்
செல்வராகாவன்
இயக்குநர் செல்வராகவன் சமீப காலங்களில் தொர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பெரியளவில் வைரலானது. தற்போது தமிழ் பேசுவதை அவமானமாகவும் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக பார்க்கும் மனநிலை பற்றி செல்வராகவன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பேசுவதை அவமானமாக பார்க்கிறார்கள்
எனக்கு ஒரு வேண்டுகோள். இதை நான் கெஞ்சி கேட்கிறேன் முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. ' தமிழ் மெல்ல சாகும் ' என பாரதியார் சொன்னார். உணமையில் தமிழ் இப்போது ஐ.சி.யுவில் தான் கிடக்கிறது. ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட ஆங்கிலத்தில் பேச தான் நினைக்கிறார்கள். தமிழில் பேசுவதை ஒரு அவமானமாக பார்க்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசும் அவசியம் எனக்கு புரிகிறது. நான் பள்ளியில் கல்லூரியில் ஆங்கிலம் தெரியாமல் நிறைய அவமானம் பட்டிருக்கிறேன். கடை பெஞ்சில் அமர்ந்து வெட்கப்பட்டு படித்து எப்படியே வெளியே வந்துவிட்டேன். பிறகுதான் எனக்கு ஒரு வெறி வந்தது. நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை பக்கத்தில் ஒரு அகராதி வைத்து தெரிந்துகொள்வேந். இது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். சினிமாவிற்கு வந்தபிறகு தான் கொஞ்சம் ஆங்கிலம் பேசி பழகினேன். அதனால் நீங்கள் தலை நிமிர்ந்து தமிழில் பேசுங்கள். நீங்கள் தமிழ் பேசுவதை இன்னொருத்தர் அசிங்கமாக பார்த்தால் அவரிடம் கேள்வி கேளுங்கள். தமிழ் பேசுவதால் உங்களை பெண்கள் இழிவாக பார்த்தால் அப்படியான பெண்ணே உங்களுக்கு தேவையில்லை. உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த மக்கள் தங்கள் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். யாரும் ஆங்கிலத்தில் பேசுவதில்லை." என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க : Suriya : பருத்திவீரன் படத்துக்கு பிறகு இப்போதான்.. மெய்யழகன் கார்த்தி பற்றி சூர்யா சொன்னது என்ன?