மேலும் அறிய

Actor Vijay: 'விஜய்க்கும் எனக்கும் பிரச்சினைக்கு காரணம் இதுதான்..' மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

வாரிசு படம் பார்த்த பலரும், அப்பா - மகன் இடையேயான பல காட்சிகளில்  விஜய் - எஸ்.ஏ.சி தான் இருவரும் தான் நினைவில் வந்ததாக பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் விஜய்யை இன்னும் தான் குழந்தையாகவே பார்ப்பதாக நேர்காணல் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

அப்பா -மகன் பாசம்:

பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

இந்த படத்தின் கதை அப்பா - மகன் இடையேயான உறவை வைத்து எடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக விஜய்க்கும், அவரது அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே  கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனாலும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

View this post on Instagram
 
A post shared by Thalapathy Vijay Fans club (@thalapathy_vijay_369)

இன்னும் குழந்தைதான்:

இதனிடையே வாரிசு படம் பார்த்த பலரும், அப்பா - மகன் இடையேயான பல காட்சிகளில்  விஜய் - எஸ்.ஏ.சி தான் இருவரும் தான் நினைவில் வந்ததாக பகிர்ந்து கொண்டனர். இதனால் தான் விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வியும் எழுப்பினர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பற்றிய பல தகவல்களை தெரிவித்துள்ளார்.  

அதில், “விஜய்க்கு இன்னும் பொறுப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அவர் ஒவ்வொரு முறையும் மேடை ஏறும் போது எதைப் பற்றி பேசப்போகிறார் என ஆண்டு முழுவதும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நானும் எப்போதும் விஜய்யை விட்டுக் கொடுத்ததில்லை. இப்ப வரைக்கும் நான் இன்னும் அவரை 5 வயது குழந்தையாகவே பார்க்கிறேன். பொதுவாக மகன்களுக்கு அப்பாவை விட அம்மாவை அதிகம் பிடிக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக விஜய்க்கு என்னை அதிகம் பிடிக்கும்.

பிரச்சினைக்கு காரணம் என்ன?

நாங்கள் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். எங்களின் அன்பை இருவரும் அறிவோம். என்னுடைய பலவீனமே அவர் தளபதியாக உயர்ந்தாலும், இன்னும் அவரை 5 வயது குழந்தையாக பார்ப்பது தான். அந்த வயசுல ஹோம் ஒர்க் பண்ணலைன்னு ஸ்கேல் வச்சு அடிப்பேன். அந்த இடமே சிவந்து போகும். உடனே எண்ணெய் போட்டு சரி பண்ணுவேன். விஜய்யை ரொம்ப நேசித்ததால் எங்கள் இருவருக்குமே பிரச்சினை ஏற்பட்டதோ தெரியவில்லை” என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

மேலும் ”என்னோட லைஃப்ல முதல்ல சினிமா, அடுத்து விஜய், அதன் பிறகு தான் என் மனைவி ஷோபாவே அப்படித்தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கு” என அந்த நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் டெங்கு அதிகம்... தஞ்சையில் 4 பேர் பாதிப்பு: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
Embed widget