மேலும் அறிய

விக்னேஷ் சிவனுக்கு எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை..எல்.ஐ.கே பட விழாவில் இயக்குநர் ராம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரபலங்கள் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும்  வெளியாகிறது.   ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான  ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது.

விக்னேஷ் சிவன் பற்றி இயக்குநர் ராம் 

இயக்குநர் ராம் பேசியபோது "நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை நான் 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். அப்போது விருகம்பாக்கத்தில் இருந்த அலுவலகத்தில் வந்த விக்கியும், இன்று 2026ல் இங்கே இந்த உயரத்தில் உட்கார்ந்திருக்கும் விக்னேஷ் சிவனும் – அந்த பயணத்தை பார்த்தால் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் யோசிக்கும் கதைகள்

சாதாரணமானவை அல்ல. வேறொரு கதையை எடுத்திருந்தால் உடனே வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் புதிதாக யாரும் முயற்சி செய்யாத கதைகளை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதியதை முயற்சி செய்வார். அதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளம்.

தமிழ் சினிமாவில் யாராவது ஒருவரால் 3 Idiots அல்லது Munna Bhai M.B.B.S. மாதிரி மனதை தொடும் படங்களை உருவாக்க முடியும் என்றால், அது விக்னேஷ் சிவன் தான் என்று நான் நம்புகிறேன். “நானும் ரௌடி தான்” கதையை படம் எடுக்கும்முன் பலமுறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதை கேட்டபோது சிரித்திருக்கிறேன். அந்த கதையை பல ஹீரோக்களுக்கு சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் அதை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

அந்த சமயத்தில் விஜய் சேதுபதியிடம் சொல்ல சொன்னேன். அவர் விக்கிக்காக மட்டும் அல்ல, பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தவர். விக்கியின் வாழ்க்கையில் “நானும் ரௌடி தான்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்பிறகு அனிருத் சேர்ந்தார், “தங்கமே” பாடல் வந்தது, நயன்தாரா வந்தார் . எல்லாமே ஒரு புதிய பாதையை உருவாக்கியது. இந்த படத்தில் பேசப்படும் காதல் எனக்கு மிகவும் நெருக்கமானது. காதல் என்பது மிகவும் விசித்திரமானது, அழகானது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு மின்னல் போல திடீரென வந்து விடும். அந்த ஒரு தருணத்தில் கையை பிடித்தால் வாழ்க்கையே மாறிவிடும். அப்படித்தான் விக்கியும் நயன்தாராவும் சேர்ந்தார்கள்.

எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் காதல் மட்டும் மாறாது. அது எப்போதும் அதே உணர்வோடு இருக்கும். காதல் என்பது உண்மையும், சில சமயம் சிறிய பொய்களும் கலந்த ஒரு அழகான உணர்வு. அந்த சிறிய பொய்களையே நாம்  உண்மையாக நம்புவது தான் காதல். இப்போது நாம் யாரையும் பற்றி தெரிந்துகொள்ள இணையத்தையே நம்புகிறோம். இப்போது தொழில்நுட்பம் ஒரு மனிதரை பற்றி தகவல் சொல்லுவதற்கு மேல், அவரைப் பற்றி ஒரு தீர்ப்பையே கூறுகிறது. உலகம் மிகவும் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த சிக்கல்களில் கூட மாறாமல் இருப்பது காதல் தான். விக்கி இந்த மாதிரி கதைகளை யோசிக்கிற தைரியம் கொண்டவர். அவர் எப்போதும் எனக்கு “விக்கி, லக்கி பாய்” தான். அவர் எங்கு வந்தாலும் ஒரு நல்ல அதிர்ஷ்டமும், சந்தோஷமும் கூடவே வரும். அவருடைய அம்மா பற்றி சொல்லவேண்டும். அவரிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு விக்கியைவிட பல மடங்கு அதிகம். அவர் விக்கியை திட்டினாலும்,

பாராட்டினாலும் அதில் ஒரு அழகு இருக்கும். விக்கி ஒரு அரிதான எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவர் எழுதும் காட்சிகளை அவர் கற்பனை செய்த அதே உயரத்தில் படமாக்குகிறார். தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு யோசிக்கும் திறமை கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவு. தமிழ் சினிமாவின் பெரிய பலம் என்னவென்றால், எங்கிருந்தாலும் யாரும் வந்து தங்கள் கனவுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.  அதற்கு உதாரணம் பிரதீப் அது இனியும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி." என்றார் 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget