
Nee Varuvai Ena: ‛தைரியம் இருந்தால் விஜய்யை நடிக்கச் சொல்லுங்க...’ அஜித் சொன்னதை உடைத்த ராஜகுமாரன்!
நீ வருவாய் என படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் மற்றும் அஜீத்தை அணுகிய அனுபவத்தை இயக்குனர் ராஜகுமாரன் பகிர்ந்துள்ளார்.

நீ வருவாய் என படம் உருவாகியதன் சுவாரஸ்ய பின்னணியை அதன் இயக்குனர் ராஜகுமாரன் இணையதளம் ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.
கதையின் கரு:
இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தை இயக்கியிருந்தார். வங்கி மேலாளராக கிராமத்தில் வரும் பார்த்திபன் தேவயானியை காதலிக்கிறார். ஆனால் அவரோ பார்த்திபனை காதலிக்காமல் அவரது கண்களை மட்டுமே காதலிக்கிறார். அது ஏன் என்பதை சுவாரஸ்யமாக சொல்லிய படம் இது. இதில் தேவயானியோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் அஜித் இறந்து விடுவார். அவரது கண்ணை அதே நேரம் விபத்தில் பார்வை இழந்த பார்த்திபனுக்கு பொருத்துவது போல கதை அமைக்கப்பட்டிருக்கும்.
ஹீரோவாக நடிக்க மறுத்த அஜித்:
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ராஜகுமாரன், முதலில் அஜித் ஓகே ஆனவுடன், பார்த்திபன் கேரக்டரில் நடிக்க விஜய்யிடமும் பேசப்பட்டது. அவரோ தேதியில்லை 15 நாட்கள் தருகிறேன். பிளாஸ்பேக் காட்சியில் வேண்டுமானால் நடிக்கிறேன்.ஹீரோவாக அஜித்தை செய்ய சொல்லுங்கள் என சொன்னார். நேராக அஜித்திடம் விஷயத்தை சொன்னால் அவரோ என்னால் முடியவே முடியாது என்றார்.
View this post on Instagram
காரணம் படம் முழுக்க ஹீரோவை ஹீரோயின் காதல் இல்லை என சொல்லியே வேண்டாம் என சொல்லுவார். இப்படி இருந்தால் ஹீரோயிசம் இருக்காது. இப்படித்தான் நடிகர் மோகன் படம் ஒன்றில் நடித்து மார்க்கெட் குறைந்தது. அதனால் என்னால் முடியாது. தைரியம் இருந்தால் விஜய்யை பண்ண சொல்லுங்கள் என அஜித் சொல்லிவிட்டார். மேலும் நான் இக்கதையை விக்ரமனிடன் உதவியாளராக சேர்வதற்கு முன்பே எழுதி வைத்துவிட்டேன்.
அதன்பிறகு கதையை யாருக்கு சொல்லலாம்ன்னு முடிவு பண்ணேன். விஜய்க்காக எழுதுன கதை இதுதான் என்பதால் பார்த்திபனுக்காக சில விஷயங்கள் மாற்றம் செய்தேன் என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கான ஸ்கிரிப்ட் :
விஜய் நாயகனாக நடித்திருந்தால் அவருக்கு ஏற்றார் போல் ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்திருந்ததாக கூறிய ராஜகுமாரன் அந்த கதையையும் கூறினார். நகரத்தில் வேலை செய்யும் இளைஞனை சுற்றி வரும் பெண்கள் அவர்கள் தொல்லை தாங்க முடியாமல் அந்த வாழ்க்கையே வெறுத்துப் போய் கிராமத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு போகும் ஒரு இளைஞன். கிராமத்திலும் அவனை எங்கு சென்றாலும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பெண், இறுதியில் அவளை ஹீரோவுக்கும் பிடிக்க.. அதன் பின் வரும் ட்விஸ்ட் என படம் நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டிருந்ததாக ராஜகுமாரன் கூறியிருந்தார். பின்னர் பார்த்திபன் ஹீரோவாக முடிவு செய்யப்பட்டதால் அவருக்கு ஏற்றார் போல் கதையை மாற்றி அமைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ராஜ்குமாரன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

